visit my blog for trading live tips:www.tradersfirst.blogspot.com
நாட்டின் பொருளாதார வளர்ச்சி:
கடந்த ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடியின் தொடர்ச்சியாக நமது பொருளாதார வளர்ச்சி வேகம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதி ஆண்டில் அது முற்றிலுமாக மீண்டு விட்டது. சர்வதேச நெருக்கடியை நமது பொருளாதாரம் சிறப்பாக எதிர்கொண்டு வேகமாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே, அடுத்த நிதி ஆண்டில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரம் இன்று வெளியாகிறது. 2010&11ம் ஆண்டில் அது 8.5 சதவீதமாக இருக்கும் . 2011&12ம் ஆண்டில் அது 9 சதவீதமாக உயரும். 2009&10ம் ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இறுதி முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.
மருத்துவத் துறையில் கட்டமைப்பு வசதிகள், மனித வளம் இன்னும் பற்றாக்குறையாகவே நீடிக்கிறது. எனவே, மருத்துவத் துறையில் அரசு அதிக கவனம் செலுத்தும. 1.35 லட்சம் கோடி நஷ்டம்:
பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக முன்னணி 10ல் 9 நிறுவன முதலீட்டாளர்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஓஎன்ஜிசி பங்குகள் மட்டும் லாபத்தை வழங்கின.
கிரீஸ் நிதி நெருக்கடி, டாலர் மதிப்பு சர்வதேச சரிவு ஆகிய காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த ஒரு மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளும் சராசரியாக 4 சதவீதம் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் 28 முதல் மே 28 வரை ஒரு மாதத்தில் 640 புள்ளிகள் சரிந்தது. இதனால் சொத்து மதிப்பு அடிப்படையில் முன்னணி 10ல் 9 நிறுவன பங்குகளின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 880 கோடி சரிந்தது. இதில் அதிகபட்சமாக ஐடிசி நிறுவன சொத்து மதிப்பு ரூ.91,139 கோடி குறைந்தது.
எனினும், இரண்டாவது இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி பங்குகள் மட்டும் சராசரியாக ரூ.18,009 கோடி உயர்ந்தன. ஏப்ரல் 28ல் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்த அதன் சொத்து மதிப்பு மே 28ல் ரூ.2.41 லட்சம் கோடியானது. அதாவது, கடந்த வெள்ளியன்று 9 சதவீத லாபத்துடன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.1,131 ஆக இருந்தது.
டாப் 10ல் முதல் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சொத்து மதிப்பு ரூ.269.71 கோடி சரிந்து ரூ.3.38 லட்சம் கோடியானது. என்டிபிசி சொத்து மதிப்பு ரூ.2,226 கோடி சரிந்து ரூ.1.65 லட்சம் கோடியாகவும், இன்போசிஸ் டெக்னாலஜிஸ் சொத்து மதிப்பு 1,799 கோடி சரிந்து ரூ.1.5 லட்சம் கோடியாகவும் இருந்தது.
ரூ.1.46 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் டிசிஎஸ் 5ம் இடத்திலும், எம்எம்டிசி ரூ.1.43 லட்சம் கோடி மதிப்புடன் 6ம் இடத்திலும் உள்ளன.
ஒரு நாளில் ரூ.1 லட்சம்: ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டில் பணம் எடுக்கும் உச்சவரம்பை எச்டிஎப்சி வங்கி உயர்த்தியுள்ளது. ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம். இதுவரை அது ரூ.50,000 மட்டுமே. இதை மற்ற வங்கிகளும் விரைவில் அறிவிக்க உள்ளன.
முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சியின் இந்த புதிய வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, மற்ற தனியார் மற்றும் அரசு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பை ஓரிரு தினங்களில் உயர்த்தி அறிவிக்கும் என்று தெரிகிறது.
இதுபற்றி மற்றொரு தனியார் வங்கியின் உயரதிகாரி நேற்று கூறுகையில், “வங்கித் துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, மற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவது இயல்பு” என்றார்.
எச்டிஎப்சி வங்கி அறிவிப்பின்படி இம்பீரியா கோல்டு டெபிட் கார்டு வைத்துள்ளவர்கள் ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இதுவரை அது ரூ.50,000 ஆக இருந்தது. அதேபோல, ஒரு நாளில் ஷாப்பிங் செய்வதற்கான உச்சவரம்பும் ரூ.1.25 லட்சமாக உயர்கிறது. ஈசி ஷாப் ரெகுலர் இன்டர்நேஷனல்/மேஸ்ட்ரோ/என்ஆர்ஓ டெபிட் கார்டு ஆகியவற்றின் உச்சவரம்பு ரூ.25,000ல் இருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆகவும் உயர்கிறது. குழந்தைகள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் கார்டில் ஒரு நாளில் ரூ.1,500 ஆக இருந்த உச்சவரம்பு ரூ.2,500 ஆகிறது. பெண்களின் டெபிட் கார்டு உச்சவரம்பு ரூ.20,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது. அவர்களது தினசரி ஷாப்பிங் உச்சவரம்பு ரூ.40,000 ஆகிறது. இது ரூ.10,000 அதிகம்.
இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கி எஸ்எம்எஸ், போன், இமெயில் மூலம் தெரிவித்து வருகிறது.
தங்கம்:
இந்த மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்ததால் இறக்குமதி 39 சதவீதம் சரிந்துள்ளது. எனினும் பண்டிகை காலம் தொடங்க இருப்பதால் விற்பனை இனி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸ் நிதி நெருக்கடியால் இந்த மாதம் உலக பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு சவரன் ரூ.14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் விற்பனை குறைந்து, இறக்குமதியும் 39 சதவீதம் குறைந்துள்ளது.
“இந்த மாதத்தில் 18 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இது 28.6 டன்னாக இருந்தது. கடுமையான விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலோ அல்லது இப்போது உள்ள நிலையில் இருந்து பெரிய அளவில் இறங்காமல் போனாலோ இந்த ஆண்டில் இறக்குமதி 50 சதவீதம் வரை குறையும்”.
தங்கம் விலை கடுமையாக உயர்ந்ததால் இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளிலும் நகை விற்பனை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment