பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் 5.9 அடி அங்குல லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இது 16ம் நூற்றாண்டு காலத்தில் உள்ளது என தெரிகிறது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பொக்லைன் இயந்திரத்தால் மணல் அள்ளும் பணி நடந்தது. 15 அடி ஆழத்துக்கு கீழே தோண்டியபோது ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டது.
இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் மண்வெட்டியால் சத்தம் வந்த இடத்தை தோண்டினர். அப்போது லிங்கம் புதைந்திருந்தது தெரிய வந்தது.
பாலாற்றில் புதைந்திருந்த லிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. பாலாற்றில் கிடைத்தது சிவலிங்கத்தின் ருத்ரபாகம், விஷ்ணுபாகம் ஆவுடையார் கிடைக்கவில்லை. ருத்ரபாகம் தொடங்கி பிரம்மபாகம் வரை லிங்க தண்டின் உயரம் 5 அடி 9 அங்குலம் இருந்தது. இது 16ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு காலத்தில் வேலூர் நாயக்கர்கள் காலத்தில் ஏதாவது கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலப்போக்கில் படையெடுப்புகளின்போது ஆற்றில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment