உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் எது என்று கேட்டால் ‘நானோ’ என்ற பதில்தான் கிடைக்கும். ஆனால் ‘பிளையர்’ தான் உலகின் மலிவான கார். ஆம், இதன் விலை ரூ.5,985 மட்டும்தான். பொம்மை கார் என்று நினைத்துவிடாதீர்கள். நிஜ கார்தான் இது.
கடந்த 1908ம் ஆண்டில் ஸ்டீபன் பாஸ்டர் பிரிக்ஸ் மற்றும் ஹரால்டு எம் ஸ்ட்ரேட்டன் ஆகியோர் இணைந்து, பிரிக்ஸ் அன்ட் ஸ்ட்ரேட்டன் பிளையர் நிறுவனத்தை தொடங்கினர். வாகன உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இவர்களின் நோக்கம். இதன்படி, 1922ம் ஆண்டில் ‘பிளையர்’ என்ற பெயரில் குட்டி காரை அறிமுகம் செய்தனர்.
இந்த காருக்கு உலகின் மலிவான கார் என்ற பெருமையும் கிடைத்தது. அதாவது, இந்த காரின் அப்போதைய விலை ரூ.5,985. இதுவரை இந்த விலையைவிட குறைவாக எந்த ஒரு காரும் விற்கப்படவில்லை. இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இது இடம் பிடித்தது. எடை குறைவான இந்த குட்டி காரில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். மரத்தால் எளிமையாக வடிவமைக்கப்பட்ட இதன் சக்கர அடிபாக அளவு 62 அங்குலம். சக்கரத்தின் விட்டம் 20 அங்குலம், அகலம் 30 அங்குலம். இதன் சிறிய இன்ஜின் பெட்ரோலில் ஓடக்கூடியது.
இந்நிறுவனம், இந்த காருக்கான விற்பனை உரிமையை 1925ல் ஆட்டோமோடிவ் எலக்ட்ரிக் சர்வீசஸ் கார்ப்பரேஷனுக்கு வழங்கியது. அந்நிறுவனம், அந்த காருக்கான இன்ஜின் சப்ளை இருந்தவரை அதை தயாரித்து விற்பனை செய்தது. அதன் பிறகு உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.
0 comments:
Post a Comment