Saturday, May 22, 2010

தினபலன்-22.05.2010

மேஷம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். ஆனால், பரணி நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்:
பழைய சிக்கல்கள் தீரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்:
எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்:
அழகு, இளமை கூடும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பூரம் நட்சத்திரக்காரர்கள் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. கால் வலி, உடல் சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி:
எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத் துப் போங்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்:
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

தனுசு:
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். ஆனால், பூராடம் நட்சத்திரக்காரர்கள் சிக்கனமாக இருப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களா வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பிரச்னை வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்:
கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

மீனம்:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger