Wednesday, May 12, 2010

இளம் வயது பிரதமர்-டேவிட்

இங்கிலாந்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. கன்சர்வேடிவ் கட்சியின் டேவின் கேமரூன் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார். லிபரல் கட்சியை சேர்ந்த நிக் கிளெக்குக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 6&ம் தேதி நடந்தது. ஆட்சியில் இருக்கும் லேபர் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, வளர்ந்து வரும் லிபரல் டெமாக்ரடிக் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியில் இருந்த லேபர் கட்சியின் பிரதமர் கார்டன் பிரவுன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக லிபரல் டெமாக்ரடிக்குடன் கூட்டணி அமைக்க பெரும் முயற்சி எடுத்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என அறிவித்தார். ஆனாலும், அவரது முயற்சி பலன் தரவில்லை. இதையடுத்து, பிரதமர் பதவியை கார்டன் பிரவுன் நேற்று ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில் புதிய ஆட்சி அமைப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் & லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் நிக் கிளெக் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து டேவிட் கேமரூனை பிரதமர் பதவியேற்க வருமாறு இங்கிலாந்து ராணி எலிசபெத் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டேவிட் கேமரூன் நேற்று இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் நிக் கிளெக்குக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் டேவிட் கேமரூனுக்கு 43 வயதாகிறது. 200 ஆண்டு கால வரலாற்றில் மிக இளம் வயதில் பிரதமர் பதவியை பிடித்தவர் என்ற பெருமை கேமரூனுக்கு கிடைத்துள்ளது. பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கேமரூன், ‘வலுவான, நிலையான சிறப்பான ஆட்சியை அளிப்பேன்’ என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger