Friday, May 28, 2010

தண்ணீரின் அவசியம்

 தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் நலத்தைக் காப்பதுடன், மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டீன் வயது இளைஞர்களின் மூளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் மூளையின் வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்துக்கும் குடிநீர் மிகவும் அவசியம் என்பது தெரியவந்துள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீரான இயக்கமும் தடைபடுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 நிமிடங்களுக்கு தொடர்ந்து வியர்வை வெளியேறினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
தண்ணீர் தாகத்துடன் இருப்பவர்களால் வேலை மற்றும் படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனினும், தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் குடித்தால் உடனடியாக மூளை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் எடைக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடுகிறது. மொத்த உடல் எடையில் 57 சதவீதம் அதாவது 70 கிலோ எடை உள்ள ஒருவருக்கு 40 லிட்டர் தேவைப்படுகிறது.
குடிநீர் பொதுவாக, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர, உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும், சீரான ஜீரணத்துக்கும், உறுப்புகளுக்கு மசகு பொருளாகவும், ஊட்டச் சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger