ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.
2009 ம் ஆண்டு நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், இந்த ஆண்டு நடந்த 3-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் பட்டம் பெற்றன.
அடுத்த ஆண்டு (2011) நடைபெறும் 4-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. கொச்சி, புனே அணிகள் பங்கேற்பதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் 4-வது ஐ.பி.எல். போட்டி முறையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. என்.பி.ஒ. மாதிரி இந்தப் போட்டியை நடத்தலாமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிலும் தலா 5 அணிகள் இடம்பெறும். உள்ளூரிலும், வெளியூரிலும் அந்த அணிகள் மோதும். இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் “சூப்பர் 6 ” சுற்றுக்கு நுழையும்.
இதன் மூலம் ஆட்டங்களின் எண்ணிக்கை குறையும். ஒரு அணி 13 ஆட்டங்களில் மோதும் வகையில் போட்டி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஐ.பி.எல். அமைப்பில் உறுப்பினராக இருக்கும் பட்டோடி ஆட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1 1
Sunday, May 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment