Friday, May 21, 2010

நக்சலைட்கள்

மாவோயிஸ்ட்கள் எனப்படும் நக்சலைட்கள், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள காடுகளில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து பணம் சம்பாதிப்பவர்களையும், சாலைகள் போடும் ஒப்பந்தக்காரர்களையும் மிரட்டி ஆண்டுக்கு ரூ.1,200 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை பறிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பணத்தில் ஆயுதம் வாங்கவும், உளவு பார்க்கவும், போக்குவரத்து மற்றும் கணினி பயிற்சிக்கும் பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள்.
‘சிவப்பு புரட்சி’ என்ற பெயரில் நக்சலைட்கள் ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டும் ஆண்டுக்கு ரூ.300 கோடி வசூலிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இதுபோல் பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் தனி நபர்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள். மியான்மர், வங்கதேசத்தில் உள்ள ஆயுத சந்தைகளில் இருந்து சட்ட விரோதமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் வாங்கி குவிக்கிறார்கள்.
கடந்த 2007 செப்டம்பரில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொலிட் பீரோ உறுப்பினர் மிசிர் பெஸ்ரா என்பவர் போலீசில் பிடிபட்டார். பிடிட்ட 2 ஆண்டுகளுக்குள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது இவரது கூட்டாளிகள் இவரை தப்பிக்கச் செய்து விட்டனர். பெஸ்ரா அளித்த வாக்குமூலத்தில் பட்ஜெட் போட்டு ஒவ்வொரு விஷயத்துக்கும்  நிதி ஒதுக்கீடு செய்ததை ஒப்புக் கொண்டார்.
புரட்சி என்ற பெயரில் மிரட்டி பறிக்கும் பணத்தின் மூலம் நக்சல் இயக்கத்தின் உயர் மட்டத் தலைவர்கள் தங்களது வசதிகளை பெருக்கிக் கொள்கிறார்கள். இவர்களது பிள்ளைகள் இந்தியாவின் பெரிய நகரங்களில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை படிக்கிறார்கள்.
ஆனால், பழங்குடியின பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை குண்டு வைத்து தகர்க்கிறார்கள். பாதுகாப்பு படையினர் தங்குகிறார்கள் என்பதால் பள்ளி கட்டிடங்களை தகர்ப்பதாக காரணம் வேறு கூறிக் கொள்கிறார்கள்.
நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக குவாரிகள், கனிம சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்கிறார்கள். வனப் பகுதியில் சாலைகள் போடும் ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி குகைகளை தகர்ப்பதற்கு வெடி வைப்பது போல் சாலைகளில் வெடி வைத்து விடுகிறார்கள். 2009ல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற ஜார்கண்ட் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்தது.
மிரட்டி பணம் பறித்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது, சட்ட விரோதமாக சுரங்கங்கள் அமைப்பது இதுதான் புரட்சியா? மக்களே சிந்தியுங்கள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger