Saturday, May 22, 2010

கைதி எண் ‘சி 7096’

மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு, ஆர்தர் ரோடு சிறையில் ‘சி  7096’ என்ற எண் வழங்கப்பட்டு உள்ளது. மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு 5 மரண தண்டனை விதித்துள்ளது. மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த வரை, அவனுக்கு கைதிக்கான அடையாள எண் கொடுக்கப்படவில்லை. இப்போது தண்டனை அளிக்கப்பட்டு விட்டதால் அவனுக்கு அடையாள எண் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் இனிமேல் அவன், ‘கைதி எண் சி 7096’ என்று அழைக்கப்படுவான். இந்த எண்ணில்தான் அவனுடைய ஆவணங்கள் அனைத்தும் பராமரிக்கப்படும்.
சிறையில் ஏ, பி, சி என மூன்று பிரிவுகள் உள்ளன. தண்டனை அளவின் அடிப்படையில், கைதிகள் இந்த பிரிவுகளில் அடைக்கப்படுகின்றனர். 3 மாதங்களுக்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் ‘ஏ’ பிரிவிலும், 3 முதல் 5 மாதம் தண்டனை பெற்றவர்கள் ‘பி’ பிரிவிலும், கொலை குற்றவாளிகள் ‘சி’ பிரிவிலும் அடைக்கப்படுகின்றனர். கசாப் கொலை குற்றவாளி என்பதால் ‘சி’க்கு மாற்றப்பட்டு உள்ளான். இருப்பினும், அங்கும் அவனுக்கு தனி அறைதான். மற்ற கைதிகளை பார்க்க முடியாது; பேச முடியாது. கசாபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
மரண தண்டனை கைதிகளுக்கு சிறையில் எந்த வேலையும் கொடுக்கப்படுவது கிடையாது. ஜாலியாக சாப்பிடலாம்; தூங்கலாம். ‘மூடு’ இருந்தால் புத்தகம் படிக்கலாம். கடுங்காவல் தண்டனை பெற்றவர்களுக்கு தச்சு வேலை, தோட்ட வேலை, மற்ற கைதிகளுக்கு சமைத்துப் போடுவது போன்ற வேலைகள் கொடுக்கப்படும். அதற்காக அவர்களுக்கு கூலி கொடுக்கப்படுகிறது. சிறையில் கசாபுக்கு உள்ளே ஒரே வேலை, அவனுடைய துணியை அவனே துவைத்துக் கொள்வதுதான். கையில் பணம் இருந்தால், சிறையில் உள்ள லாண்டரியில் போடலாம். ஆனால், அவனிடம் ஒரு பைசா கூட கிடையாது.

எல்லாம் சரிதான் கசாபை என்றைக்கு தூக்கில் போடுவார்கள்? அது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger