Thursday, May 20, 2010

இளமையான சீனா

சீனாவில் பெரும்பாலோர் தங்கள் வயதைவிட 10 வயது குறைவாக நினைக்கின்றனர். எனவே, இளமைக்கான பொருட்கள் விற்பனை சூடுபறக்கிறது.

சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1978ம் ஆண்டே அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஒரு குடும்பம், ஒரு குழந்தை கொள்கையை அறிவித்தது. அதனால், திருமணம் செய்து ஒரு குழந்தையோடு நிறுத்தி விடும் மக்களில் பெரும்பாலோர் வயதில் அரை சதம் அடித்தாலும், 10 வயது குறைவானவராகவே தங்களைக் கருதுகின்றனர்.
இதுகுறித்து ரூய் யோ என்ற நிபுணர் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சீனாவில் 50 வயதைத் தொட்டவர்களில் பெரும்பாலோர் 50ஐ நினைப்பதில்லை. 40 அல்லது 45 வயது ஆவதாகவே கருதுகின்றனர். இதனால், நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் குழம்பித் தவிக்கின்றன. மார்க்கெட்டிங் செய்வதில் பிரதிநிதிகள் திணறுகின்றனர்.
வயதானவர்களும் இளமையாகவே கருதிக் கொள்வதால், வயதான பிரிவினருக்கான தயாரிப்புகள் அதிகம் விற்பனை ஆவதில்லை. எனவே, அந்த பிரிவில் உள்ள நிறுவனங்கள், இளைஞர்களுக்கான பொருட்கள் தயாரிப்புக்கு மாறி வருகின்றன.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger