Thursday, May 20, 2010

காய்கறிகள்

வாரத்தில் 5 நாட்களுக்கு உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொண்டால், உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர், உடல்நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவை சியோலில் புத்தமத கோயிலில் 5 நாட்கள் தங்க வைத்தனர்.
கோயிலில் தங்கிய நாட்களில் காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்ட சைவ உணவே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு முன்பும், 5 நாட்களுக்குப் பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. கோயிலில் தங்கி சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில், உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரிய வந்தது.
வாரத்தின் மீதி 2 நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் ரகங்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு எடுத்த சிறுநீர் பரிசோதனையில், விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு அதிகரித்திருந்தது. எனவே, வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “சைவ, அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், சிறுநீர் பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றன. ரசாயன சுரப்பைக் குறைத்து உடல் ஆரோக்கியத்தைக் காக்க, வாரத்தில் 5 நாட்கள் காய்கறிகள் கலந்த சைவ உணவு அவசியம்” என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger