Friday, May 21, 2010

தினபலன் - 21.05.2010

மேஷம்: 

பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆனால், அசுவனி நட்சத்திரக் காரர்களுக்கு வீண் செலவுகள் வந்துபோகும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்:
நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்:
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். நிம்மதியான நாள்.

சிம்மம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். மகம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

கன்னி:
குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வியா பாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.

துலாம்:
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார் கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சிறப்பான நாள்.

தனுசு:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். ஆனால், மூலம் நட்சத்திரக்காரர்கள் நிதானித்து செயல்படுவது நல்லது. வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைகள் நீங்கும் நாள்.

மகரம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர் களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger