Monday, May 10, 2010

அன்னை தெரசாவின் வாழ்வில்.......

அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு :
அன்னை தெரசாவிற்கு ஒரு பழக்கம் இருந்ததது.அதிகாலையிலேயே எழுந்து விடுவார் .எழுந்து குளித்து விட்டு,தெருதெருவாக போய் பிச்சை எடுப்பார்.
தனக்காக இல்லை,தன் விடுதியில் இருக்கும் அகதிகள்,முன்னால் பாலியல் தொழிலாளிகள்,குஷ்ட ரோகிகள்,மனநிலை சரி இல்லாதவர்கள்,நோயுற்ற குழந்தைகள் ,எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள்,முதியவர்கள் இவர்களுக்காக.
          பொதுவாக காலை நேரத்தில் எல்லோரும் நல்ல மனநிலையோடு இருப்பார்கள்
உதவி கேட்டால் மறுக்க மாட்டார்கள் என்று நினைத்தார் தெரசா.அதனால் தான் உதவி கேட்டு போவதற்கு காலை பொழுதை தேர்ந்தெடுத்தார்.
    ஒருநாள் காலை வழக்கம் போல ,கொல்கத்தா நகரின் தெரு ஒன்றுக்குள் நுழைந்தார் தெரசா.கடைகடையாக உதவி கேட்க ஆரம்பித்தார்.ஒரு கடை முன்னால் நின்று பிச்சை கேட்டார்.கடைக்காரன் அவரை பார்த்தும்,பார்க்காதது போல் இருந்தான். அந்த கடைகாரனுக்கு கடுகடுத்த முகம்,பீடாவையும்,ஜர்தாவையும் போட்டு போட்டு சிவந்த வாய்.கடைக்காரன் சைகையால் அவரை போகச்சொல்லி
விரட்டினான்.தெரசா விடவில்லை ,கடை வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.
      போ!போ! ஒன்னும் கிடையாது! என்று விரட்டினான் கடைக்காரன்.
அவன் விரட்டியதற்காக தெரசா சோர்ந்து போய் விடவில்லை,மாறாக இப்படி விரட்டுகிற ஓர் ஆளிடமிருந்து எதையாவது வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
    'விடுதியில் இருக்கிற என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்க அய்யா! என்றபடி
கையை நீட்டிக்கொண்டே நின்றார்.
    கடைக்காரன் அவரை கோபமாக விழித்து பார்த்தான்.அன்னை தெரசாவின் கைகளில் சட்டென்று துப்பினான்.தெரசாவின் கைகளில் அவன் மென்று துப்பிய
பீடா சக்கையும் எச்சிலும் வந்து விழுந்து,வழிந்து கொண்டிருந்தது.
  அப்போதும் மனம் தளரவில்லை தெரசா.
ரொம்ப நன்றி அய்யா! இப்போ நீங்க கொடுத்தது எனக்கு,விடுதியில் இருக்கிற என்
குழந்தைகளுக்கு வேற எதாவது குடுங்க? என்று இன்னொரு கையை நீட்டினார்.
     இப்படி எதற்கும் மனம் தளராமால் நிற்கிற திகைத்து போனான் கடைக்காரன்,
கடை கல்லாவிலிருந்த மொத்த பணத்தையும் எடுத்து தெரசாவின் நீட்டிய கைகளில்
வைத்து விட்டான்.
      அன்னையின் கருணையை என்னவென்று சொல்வது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger