Tuesday, May 25, 2010

மனித நேயம்

விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் மங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களின் கவனத்தை அங்கிருந்த முஸ்லிம் ஒருவர் ஈர்த்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்து கரிக்கட்டைகளாக கொண்டு வரப்பட்ட சடலங்களை, ஆம்புலன்ஸ் வேனில் இருந்து இறக்கி சவக்கிடங்குக்கு கொண்டு செல்ல உதவினார். விமான விபத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதத்தினரும் பலியானார்கள். மத வேறுபாடு பார்க்காமல் சடலங்களை அடையாளம் காட்ட வந்த உறவினர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் சொன்னார்.

இப்படி, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்த அவர் யார்? ஒரு வேளை மருத்துவமனை ஊழியராக இருப்பாரா? இல்லை, சேவை அமைப்பை சேர்ந்தவரா? என்ற சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, அவர் மங்களூர் அருகே உள்ள மஞ்ஜேஷ்வர் நகரை சேர்ந்த அப்துல் ஹமீத் அலி (60) என்று தெரிந்தது. ‘‘மக்கள் வேதனையில் அலறி துடித்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் ஓய்வு எடுக்க என்னால் முடியவில்லை. இதனால், உடனடியாக உதவ புறப்பட்டேன். 60 சடலங்களை வேனில் இருந்து இறக்கி சவக்கிடங்கில் வைத்தேன்’’ என்று அப்துல் ஹமீத் அலி கூறினார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger