இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. புகை பிடிப்பவரைவிட அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு அதிகம். புகை பிடிப்பதால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பொது இடங்கள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
“புகையிலைக்கு எதிரான சட்டங்களை மாவட்ட நிர்வாகம் உறுதியாக அமல்படுத்தினால், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது குறையும்”.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் புகை மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, கிராமசபை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர், சுயவுதவிக் குழுவினர், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புகையிலை பழக்கமே இல்லாத கிராமமாக மாற்றி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் பல ஊராட்சிகள் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளன. புகைபிடிப்பவர்கள் தாங்களாகவே மனம் மாறி புகையிலை பிடிப்பதை விட வேண்டும். அப்போதுதான் உடல் நலம் சீராகும். மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
புகை பிடிப்பதால் மற்றும் புகையை அடுத்தவர் சுவாசிப்பதால் ஏற்படும் நோய்கள்: மூளைக்கட்டி, நிணநீர் திசுக்கட்டி, சைனஸ், வாய் புற்றுநோய், நெஞ்சக நோய்கள், மார்பு புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்கள், ரத்த புற்று நோய், இனப்பெருக்க பாதிப்புகள், தமணி தடிப்பு இறுக்கம்.
ஓட்டல், விடுதிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், நூலகங்கள், விளையாட்டு அரங்குகள், வியாபார நிறுவனங்கள், கடைகள், மனமகிழ் மன்றங்கள், தேநீர் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், நீதிமன்ற வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் இங்கெல்லாம்புகை பிடிக்க முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.புகை பழக்கத்தால் ஏற்படும் தீய
விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.
0 comments:
Post a Comment