Wednesday, May 19, 2010

உயர் மனஅழுத்த தினம்

ஒவ்வொரு கிலோ உடல் எடை அதிகரிப்புக்கும் ரத்த அழுத்தத்துக்கான அளவு உயரும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக உயர் மனஅழுத்த தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு பெங்களூரின் போர்ட்டிஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
பருமனமாகவும், எடை அதிகமாகவும் இருந¢தால் உயர் ரத்த அழுத்த ஆபத்து ஏற்படும். அதனால் பக்கவாதம், இதய செயலிழப்பு, சிறுநீரக கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு கிலோ உடல் எடை உயரும்போதும் ரத்த அழுத்த அளவீடான மெர்க்குரி மில்லிமீட்டர் 2 புள்ளிகள் அதிகரிக்கும்.
எனவே, உயர் மனஅழுத்தத்தை (ஹைப்பர் டென்ஷன்) ஏற்படுத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
உயர் மனஅழுத்த நோய்க்கு ஆண்டுதோறும் உலகில் 70 லட்சம் பேர் பலியாவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் எடை அதிகம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களில் சுமார் 30 கோடி பேர் பருமனாக இருக்கின்றனர். இது உயர் மனஅழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
கம்ப்யூட்டர், டிவி முன் அதிக நேரம் கழிப்பதும், உடல் உழைப்பு குறைவதும் எடை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன என்றனர்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger