Friday, May 21, 2010

இதய நோயை தடுக்கிறது அரிசி

 இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்தை, கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும்..
ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
பாலீஷ் செய்யப்படாத அரிசியின் மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது. இது உமி எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது. அதில் விரைவான ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை, உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற பொருள் உள்ளது. அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது. அரிசியை பாலீஷ் செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது. அதில் செறிந்துள்ள சுபாலெரோன் இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.
 பாலிஷ் செய்யப்படாத அரிசி இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்.






2 comments:

ஸாதிகா said...

உபயோகமான தகவல்கள்

INDIA 2121 said...

நன்றி!

Related Posts with Thumbnails
 

Blogger