Friday, May 21, 2010

இஞ்சியின் மகத்துவம்

தினசரி உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலி உட்பட பல்வேறு தசை வலிகளை நீக்கி விடும்.

இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள்.
இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உண்டு. தவிர, உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைக்கிறது.  தினமும் உணவில்
இஞ்சியை  சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகள் 25 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உண்டு..

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger