Tuesday, May 25, 2010

சாக்லேட்

இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்களை சாப்பிட்டால் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அதன்மூலம் வயதாவதை தள்ளிப் போடலாம் என்று தெரிய வந்துள்ளது.

அதுபோன்ற சாக்லேட்டை உலகின் மிகப் பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ஆக்டிகோவா அறிமுகம் செய்கிறது. தோல் பாதிப்புகளைத் தடுக்கும் பொருளாக ப்ளேவோனால் கருதப்படுகிறது. அது அதிகமுள்ள இயற்கையான பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டை சாப்பிடுவதால் தோல் சுருக்கங்களைக் குறைக்கலாம். சாக்லேட்டுக்கு முக்கியத் தேவையான கோகோவில் ப்ளேவோனால் அதிகம் உள்ளது. எனவே, தினமும் 20 கிராம் அளவுக்கு சாக்லேட் சாப்பிடுவதால் தோல் சுருக்கங்களை தடுக்க முடியும். கோகோவில் அதிமுள்ள ப்ளேவோனால், தோலின் ஈரத்தன்மை போகாமல் காத்து, விரிந்ததும் பழைய நிலைக்கு வரும் திறனை அதிகரிக்கிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோல் சுருக்கங்கள்தான் வயதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சுருக்கங்கள் தவிர்க்கப்படுவதால், வயதாவதைத் தள்ளிப் போட முடியும். புகை பிடித்தல், சுற்றுச்சூழல் மாசு, காபியில் உள்ள காபைன், தூக்கமின்மை ஆகியவைதான் வயதாவதை விரைவுபடுத்துகின்றன. இந்த பிரச்னைகளை சந்திப்பவர்கள் தினமும்
 20 கிராம் சாக்லேட் சாப்பிட்டால், வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம்.அதிக கோகோ கொண்ட டார்க் சாக்லேட், ரத்த அழுத்தத்தை குறைக்கும், பக்கவாத ஆபத்தைத் தடுக்கும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger