Thursday, May 27, 2010

ராஜகோபுரம் இடிந்து விழுந்தது.

 
 காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் நேற்றிரவு 8 மணியளவில் முழுவதுமாக அடியோடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பஞ்ச பூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். திருப்பதியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இக்கோயிலில் ராகு, கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலின் ராஜ கோபுரம் 140 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துவந்தது. கி.பி. 1510ம் ஆண்டு கிருஷ்ண தேவராய மன்னர் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த பிரம்மாண்ட ராஜகோபுரத்தை கட்டியதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜகோபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது திடீரென ராஜகோபுரத்தின் மேல் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை கோபுரத்தின் இடதுபுறம் இரண்டாக விரிசல் ஏற்பட்டு பிள வுபட்டது போல் காணப்பட்டது. 
மின்னல் வெட்டு போல் காணப்பட்ட இந்த இடத்திலிருந்து செங்கற்கள், சுண்ணாம்பு கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ராஜகோபுரம் முழுவதும் நேற்றுறிரவு இடிந்து விழுந்தது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger