பங்கு சந்தை பற்றிய LIVE DATA விற்கு விசிட் மை ப்ளாக் www.tradersfirst.blogspot.com
பங்குச் சந்தை இப்போது அதிக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இதனால், சிறு முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருப்பார்கள். உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கேற்றால் நமது பங்குச் சந்தையில் பெரிய சரிவு ஏற்படாமல் தடுக்க முடியும்.அதன்மூலம், வெளிநாட்டு சாதக, பாதக அம்சங்கள் நமது பங்குச் சந்தைகளை பெரிய அளவில் பாதிக்காமல் செய்ய முடியும். அப்படி செய்தால் முதலீட்டாளர்களின் பணத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைக்கும். பங்கு முதலீடு செய்ய சரியான நேரம் பற்றி சிறு முதலீட்டாளர்களிடம் பிரசாரம் செய்வது இதற்கு அவசியம்.
பங்கு முதலீடு பற்றி மக்களுக்கு கல்வி அளிக்க நாடு முழுவதும் முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தை தொடங்க கம்பெனி விவகாரத் துறை திட்டமிட்டுள்ளது. பெருநகரங்களில் பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் பங்குச் சந்தை பற்றி விரிவான அறிவைப் பெற்றுள்ளனர். எனவே, சிறு நகரங்கள், டவுன்களில் இந்த விழிப்புணர்வு கல்வி திட்டம் தொடங்கப்படும்.
பங்கு முதலீடு செய்யும் வழிகள், லாபம் ஈட்ட சரியான நேரம், முதலீடு செய்வதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி சிறு முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவை எளிதாக மக்களை சென்றடைய மாநில மொழிகளில் பிரசாரம் செய்ய திட்டமிடபட்டுள்ளது.
நமது பங்குச் சந்தைகளில் நம்நாட்டு மக்களின் முதலீடு மிகக் குறைவாக உள்ளது. வீட்டின் சேமிப்பில் 1.6 சதவீதம் மட்டுமே பங்கு முதலீடாக உள்ளது.
எனவே பங்கு சந்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வதும்,பாதுகாப்பாக முதலீடு செய்வது பற்றியும் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு அவசியம் தேவை.
இன்றைய சூழலில் நிறைய நகரத்து பெண்கள் வீட்டிலுருந்தபடியே பங்கு சந்தைகளில்
முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.மேலும் பெருநகரங்களில் மாணவர்களும் கூட பகுதி நேரங்களில் பங்குசந்தைகளில் ஈடுபட்டு அவர்களின் செலவுக்கு சம்பாதித்து விடுகிறார்கள். ஆனால் பங்குசந்தைகளில் ஈடுபட பங்குசந்தை
பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.அரசு இதுமாதிரி விழிப்புணர்வு முகாம்களை
நகரங்களில் மட்டுமல்லாமல்,கிராமங்களிலும் கண்டிப்பாக நடத்த வேண்டும்.
0 comments:
Post a Comment