Monday, May 10, 2010

அரசியல்வாதிகள்

பிஜிங் சென்றுள்ள இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீனாவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அன்னிய நாட்டில், அந்த நாட்டுக்கு ஆதரவாக, சொந்த நாட்டை ஒரு அமைச்சரே விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பரில் கோப்பன்ஹேகனில் அதிகரித்து வரும் பூமி வெப்பம் தொடர்பான உச்சி மாநாடு நடந்தது. அதையடுத்து தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பெய்ஜிங் சென்றுள்ள ஜெய்ராம் ரமேஷ், ‘‘சீனாவால் நமக்கு ஆபத்து இருப்பதாக தேவையில்லாமல் உள்துறை அமைச்சகம் பயமுறுத்தி வருகிறது. சீனாவின் ஹூவேய் நிறுவனத்திடமிருந்து டெலிகாம் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பாதுகாப்பு காரணங்களை காட்டி தடை விதித்துள்ளது உள்துறை அமைச்சகம். இது தேவையில்லாத பயம். நல்லவேளை, இதனால் இரு தரப்பு உறவு பாதிக்கவில்லை. சுற்றுச்சூழல் தொடர்பாக சீனாவுடன் ஏன் பேச்சு நடத்த வேண்டும் என்கிறார்கள். உலகிலேயே அதிகம் கார்பன் வெளியிடும் நாடு சீனா. 23 சதவீதம். நாம் 5 சதவீதம்தான். கார்பன் வெளியிடுவதை சீனா குறைத்தால் அது ஆசியாவுக்கே நல்லது. அதனால்தான் பேச்சு நடத்துகிறோம். இதையும் உள்துறை அமைச்சகம் குறை கூறுகிறது. எதற்கெடுத்தாலும் சீனா மேல் உள்துறை அமைச்சகம் குறைகூறி, விமர்சனம் செய்வதால் இரு தரப்பு உறவே பாதிக்கிறது’’ என கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பால்பவுடரில் தொடங்கி, ஷாம்பூ, செல்போன், வாட்ச், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் வரை அனைத்தையும் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரித்து, இந்தியாவுக்குள் அனுப்பி வருகிறது சீனா. நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை என இந்தியாவை சுற்றியிருக்கும் நாடுகள் அனைத்தையும் தன் வசப்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக திருப்பி வருகிறது சீனா. இந்தியாவின் திபெத் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்யும் சீனா, அருணாசல பிரதேசத்தின் பல ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவை தன்னுடையது எனக் கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ரமேஷுக்கும் தெரியும். இவ்வளவு செய்யும் சீனாவுக்கு ஆதரவாக, அன்னிய மண்ணில் உள்துறை அமைச்சகத்தை விமர்சனம் செய்திருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.

வால் பையன் கமெண்ட் : ஏற்கனவே நமக்கும் சீனாவுக்கும் வாய்க்க தகராறு. இதில் நமது அமைச்சரே நம் நாட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது கேலிக்குரிய செயல்.
இதை பிரதமர் கவனிப்பாரா?

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger