மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிக்கும் சர்வதேச அளவுகோளுக்கான புதிய விதிமுறைகளின்படி, இந்தியாவில் நடுத்தர பிரிவினர் யாருமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகள் அல்லது பணக்காரர்கள் என்று மட்டுமே அழைக்க முடியும்.
சர்வதேச வளர்ச்சி மையத்தின் தலைவரும், பொருளாதார வல்லுநருமான நான்சி பேர்டுசால், வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தர அடிப்படையில் நடுத்தர மக்களுக்கான புதிய விதிமுறையை வகுத்துள்ளார். இது உலக வங்கியின் அடுத்த இதழில் வெளியாக உள்ளது. அவரது கணிப்புப்படி, வளரும் நாடுகளில் வசிப்பவர்களில் ஒரு நாளைக்கு ரூ.450க்கு மேல் சம்பாதிப்பவர்கள் நடுத்தர மக்களாக கருதப்படுவார்கள். எனினும், அவர்களில் மிக அதிக வருவாய் உள்ள 5 சதவீதத்தினர் பணக்காரர்களாகவும், ரூ.450க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகவும் கருதப்படுவர்.
இதன்படி பார்த்தால், இந்தியாவில் நடுத்தர வருவாய் பிரிவினர் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனெனில், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஒரு நாளைக்கு ரூ.450க்கு மேல் சம்பாதிப்பவர்கள் 5 சதவீதம் மட்டுமே. எனவே, இவர்கள் அனைவரும் உயர் வருவாய் பிரிவினராக கருதப்படுவார்கள். இதற்குக் கீழ் சம்பாதிப்பவர்கள் ஏழைகள்.
இதற்கு முன் நடுத்தர பிரிவினர் என்பதற்கு வேறு அளவுகோல் இருந்தது. சட்டத்தை மதிப்பதுடன் சராசரி சம்பளத்துடன் வேலையில் இருப்பார்கள். பணக்காரர்களைப் போல தலைமுறை சொத்தை நம்பி இருக்க மாட்டார்கள் என்பது அது. இப்போது உலக வங்கி இதழின் புது விதிப்படி இந்தியாவில் மிடில் கிளாஸ் மிஸ் ஆகி விடும். சீனாவில் 3.4 சதவீதத்தினர் நடுத்தர பிரிவின் கீழ் வருகின்றனர். இது தென்னாப்பிரிக்காவில் 7.6%, பொலிவியாவில் 12.2%, பிரேசிலில் 19.4%, ரஷ்யாவில் 29.8 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்காவில் 91 சதவீதமும், ஸ்வீடனில் 95 சதவீதமும் நடுத்தர மக்கள் இருப்பார்கள்.
வால்பையன் கமெண்ட் : என்ன செய்வது இந்தியாவின் மொத்த பணமும் தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் கைகளில் அல்லவா
உள்ளது.,கடந்த வாரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி வீட்டில் இருந்து 1500 கிலோ தங்கம்,1500 கோடி பணம் கைப்பற்றபட்டுள்ளது.ஒரு அரசு அதிகாரி வீட்டிலே இவ்வளவு பணம் என்றால்? இந்தியா முழுவதும்! யார் சொன்னது இந்தியாவை ஏழை நாடென்று
0 comments:
Post a Comment