Friday, May 7, 2010

ஆன்மிகம் -ரமண மகரிஷி

ரமணருக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட ராமன்.அம்மா அப்பா பெயரை உச்சரிக்கும் முன்பே ரமணரின் உள்ளம் ஆர்வத்தோடு உச்சரித்த பெயர் 'அருணாசலம்' என்பதாகும்.
     ரமணருக்கு இளமையிலேயே மரண பயத்தை வெல்லும் ஆற்றல் ஏற்பட்டது.'மனிதன்' தன மனவலிமையால் மரணத்தையும்,மரண பயத்தையும் வெல்ல முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார் ரமணர்.
    மலையே சிவனாக மலர்ந்த திருவண்ணாமலையை  ரமணர் இதயம் விரும்பியது.
அந்த அருணாச்சல பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது,திடீரென்று ஒருநாள் மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.ரயில் முலமே பயணம் மேற்கொண்டார்.
     ஞானியர் பூமியான திருவண்ணாமலைக்கு ரமணர் வந்த அந்த புனித நாள் 29 .08 .1896 ஆகும்.
    அருணாச்சல சிவலிங்க திருமேனியை தரிசித்து பக்தி ததும்பி கட்டி தழுவி அப்பா! அருணாச்சலா! இதோ வந்து விட்டேன் என்று கதறி கண்ணீர் மல்கினார்.
  திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பாதாள லிங்க குகையில் நீண்ட காலம் தங்கினார் ரமணர்.இளமையிலேயே தவம் மேற்கொண்ட வேங்கட ராமனின் மேம்பாட்டை உணர்ந்த கணபதி முனிவர் என்பவரே,வேங்கட  ராமனை 'ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி' என்று முதன் முதலாக அழைத்தார்.
  ரமணரின் தாயார் அழகம்மை ,ரமணர் மீது வைத்த பேரன்பின்
காரணமாக1898 இல் திருவண்ணாமலைக்கு வந்து விட்டார்.1914 இல் மகனை பிரிய மனம்இல்லாமல் திருச்சுளிக்கே வருமாறு அழைத்தார்.
ஞான வழியில்ஈடுபட்ட ரமணரோ இதனை மறுத்து விட்டார்.1916 முதல்
 தாய் அழகம்மை ராமனுருடன் நிரந்தரமாகவே தங்கலானார்.
   ரமணர் குரு மூர்த்தம்,விருப்பாச்சி குகை ,ஸ்கந்த ஆசிரமம்,பாதாள லிங்க குகை ,பவள குன்று ஆகிய இடங்களில் தவ நிலையும்,யோக நிலையும் மேற்கொண்டார் .மௌன விரதம் பூண்டிருந்த மகன் தன்னுடன் பேசமாட்டானா? என்று ஏங்கினார்.ரமணரின் அன்னை.
   ஆனால் மௌன விரதம் பூண்டிருந்த ரமணரோ ஒரு காகிதத்தில் பின்வருமாறு எழுதி தனது தாயிடம் கொடுத்தார்."அவரவர் ப்ராப்தம் பிரகாரம் அதற்க்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான் என்றும்,நடவாதது என் முயற்சிக்குனும் நடவாது நடப்பது என் தடை செய்யினும் நில்லாது இதுவே திண்ணம்,ஆதலால் மௌனமாய் இருத்தல் நன்று. தனது தாய்க்கே இந்த முதல் உபதேசத்தை செய்தார் ரமணர்.
   நோய் வாய்பட்டிருந்த அன்னை அழகம்மை 19 .05 .1922 இரவு எட்டு மணிக்கு அமரர் ஆனார்.அன்னை போய் விட்டதை பற்றி ரமணரிடம் ஒரு அன்பர் கேட்டபோது  இல்லை !போய் விட்டலாவது?தானேதான் ஆனாள்" என்றார் ரமணர் .
   ஆதிசங்கரர் போன்றும் முற்றும் துறந்த பட்டினத்தார் போன்றும் தாய் மீது அளவற்ற பாசமே கொண்டார்.மலை மீதுள்ள ஸ்கந்த ஆசிரமத்திலிருந்து மலை அடிவாரத்திலுள்ள அன்னையின் சமாதிக்கு அடிக்கடி போய் வருவது வழக்கம்,ஒருநாள் அன்னையின் சமாதிக்கு சென்றவர் மலைக்கு திரும்பவில்லை.அங்கேயே தங்கி
அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். 
    அழகான சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்த மாத்ரு பூதேச்வர் ஆலயம் 1949 மார்ச் 17 ம் நாள் பகவான் ரமணர் முன்னிலயில் கும்பாபிஷேகம் கண்டது.14 .04 .1950 வெள்ளிகிழமை இரவு 8 .47 மணிக்கு பகவான் ரமணர் மஹா நிர்மாணம் பெற்றார்.
   அப்போது வானில் ஒரு பெரிய நட்சத்திரம் தெற்கிலிருந்து வட கிழக்காக மெதுவாக
நகர்ந்து அருணாச்சல மலையின் பின்புறம் சென்று மறைந்த அற்புத நிகழ்ச்சியை பக்தர்கள் இந்தியாவின் பல பாகம்களிருந்தும் பார்த்தனர்.ஆம் ரமணர் அருணாச்சல
ஜோதியுடன் கலந்து விட்டார்.
               ரமணர் முக்தி அடையும் கால கட்டத்தில் பக்தர்கள் கதறி அழுதனர்.அப்போது "நான் எங்கு போக முடியும்? நான் இங்கு தான் இருக்கிறேன்"
     இதுவே ரமணர் கூறிய இறுதி பொன்மொழி.

,

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger