உலக கோப்பை டி20 தொடரில், விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசில் நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் கட்ட லீக் சுற்றின்போது ஏற்கனவே வழங்கப்பட்ட தரவரிசையின் அடிப்படையில், இந்த அணிகள் இ மற்றும் எப் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதவுள்ளன. இந்த சுற்றின் முடிவில் இ, எப் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தென் ஆப்ரிக்கா & ஆப்கானிஸ்தான் அணிகளிடையே நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வென்ற அணி, சி1 தரவரிசையுடன் இ பிரிவில் இடம் பெறும்.
சி பிரிவில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்தாலும், ஏற்கனவே சி2 என்ற ரேங்க் வழங்கப்பட்டிருந்ததால், சூப்பர் 8 சுற்றில் எப் பிரிவில் இடம் பெற்றது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளுடன் இந்தியா மோத உள்ளது.
நாளை இரவு 7.00 மணிக்கு பார்படாசில் நடக்கும் சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் இந்தியா & ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த சுற்றில் ஒவ்வொரு ஆட்டமுமே மிக முக்கியமானது. குறைந்தபட்சம் 2 வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். பலமான ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும்.
வயிற்றுக் கோளாறு காரணமாக தென் ஆப்ரிக்க அணியுடனான லீக் ஆட்டத்தில் விளையாடாத தொடக்க வீரர் கம்பீர் களமிறங்கத் தயாராக உள்ளதால், இந்திய அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது. தொடக்க லீக் சுற்றில் அதிரடியாக சதம் விளாசி அசத்திய ரெய்னா, சூப்பர் 8 சுற்றிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
வால் பையன் கமெண்ட் : சூப்பர்-8 சுற்றிலும் இந்தியா அசத்துமா?
0 comments:
Post a Comment