கார்குண்டு மூலம் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க சதி செய்ததற்கு பாகிஸ்தான் தலிபான் காரணமா என அமெரிக்கா புலனாய்வுத்துறையினர் தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகே நேற்று முன்தினம் மாலை ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரிலிருந்து திடீரென புகை எழுந்தது. இதனால் அந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என பீதி கிளம்பியது. அந்த இடத்தை தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சுற்றிவளைத்தனர். அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பீதியை கிளப்பியது.
ரோபோ மூலம் மர்ம காரை சோதனையிட்ட போலீசார் அதில் வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்தனர். அதில் மூன்று புரோபேன் டேங்குகளும், இரண்டு கேஸ் கன்டெய்னர்களும், வெடி பொருட்கள் மற்றும் வயர்களுடன் கூடிய கடிகாரங்களும் இருந்தன. இது வீட்டில் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த குண்டாக இருக்கும் என கருதப்படுகிறது. பின் அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடிகுண்டு செயல் இழக்கச் செய்த குழுவினரை அதிபர் ஒபாமா பாராட்டினார். இந்த சதி செயலுக்கு யார் காரணம் என அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தெக்ரிக்&இ&தலிபான் என்ற அமைப்பு, நியூயார்க் கார் குண்டு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக இன்டர்நெட் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. இந்த வீடியே ‘யு ட்யூப்’ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘‘அமெரிக்காவில் இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்டதற்கு வாழ்த்துக்கள். இச் சம்பவத்துக்கு தெக்ரிக்&இ&தலிபான் பொறுப்பேற்கிறது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேசிய தெக்ரிக்&இ&தலிபான் அதிகாரி குவாரி உசேன் மெக்சூத் என்பவர், ‘‘ஈராக்கில் அல்&கய்தா அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்களான அபு உமர் மற்றும் அயுப் அல் மஸ்ரி ஆகியோர் கடந்த மாதம் கொல்லப்பட்டதற்கும், பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவதற்கும் பழிவாங்கும் விதத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.
நியூயார்க் கார் குண்டு சம்பவத்துக்கு தெக்ரிக்&இ&தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. எனவே, இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என அமெரிக்க புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவை கண்காணித்து எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை கார் குண்டு மூலம் தகர்க்க தீவிரவாதிகள் சதி செய்தது பற்றி முன்கூட்டியே தகவல் தெரியாமல் போய்விட்டது. வெடிகுண்டு இருந்த காரில் இருந்து புகை வெளியான பின்பு, உடனடியாக சுதாரித்து வெடிகுண்டை செயல் இழக்கச் செய்துள்ளனர்.
6 comments:
ஆல்ரெடி ஒரு வால்பையன் இருக்காரு தெரியுமாங்க?
THERIYUM SIR
THANK YOU FOR YOUR VISIT
உங்கள் ப்ளாக்கில் நல்ல தகவல்கள்..நன்றி சகோதரா
ஹீ... ஹீ...
தங்கள பாக்க கானல இந்தியாவ எச்சரிக்கிறாங்கலாமாம்...
நான் நினைக்கிறேன்... " சீனாதான் எங்கட கட்டுப்பாட்டுக்க இல்லாம போச்சு... இந்தியாவையும் விடக்கூடாது..." என்ற நல்லென்னம் போல...
உண்மையை சொன்னிர்கள் வளாகம் சார்
தங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி
எனது ப்ளாக்கிற்கு வந்தமைக்கு நன்றி
Post a Comment