குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நசீம். 12ம் வகுப்பு மாணவியான இவர் ரயிலில் கழிவுகள் அகற்றும் கருவி, நெருப்பின்றி சீல் வைக்கும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்ததின் மூலம் தேசிய அளவில் பிரபலம் அடைந்தார்.
பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி பல்கலைக்கழகம் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளை பாராட்டி கவுரவித்துள்ளது.
இந்தநிலையில் கல்வி, விளையாட்டு, அறிவியல், கலைகளில் சிறந்துவிளங்கும் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து தங்களது நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை ஜப்பான் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த 10 நாட்கள் கல்வி சுற்றுலாவுக்கு செல்ல மாஷா நசீம் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ள இந்த சுற்றுலாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மாண வர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment