Wednesday, May 5, 2010

பெண்களே உஷார்

ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் கேள்விப்பட்ட ஒன்று. துண்டு பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டு நகை நட்டுகளை இழந்த அப்பாவி பயணிகளை பார்த்ததும் உண்டு. ஆனால், இங்கே மயக்க மருந்து கலந்த ஸ்வீட்ஸ் கொடுத்து, 23 வயது பெண்ணை கடத்திச் சென்று விலைக்கு விற்ற சம்பவம் கொடுமையானது.

மகாராஷ்ரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா. ஏப்ரல் 26ம் தேதி, நாக்பூரில் இருந்து ஜான்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்ல தனியாக ரயில் ஏறினார். மகாமயா எக்ஸ்பிரஸ் ரயில், இரண்டாம் வகுப்பு பெட்டி, ஏகப்பட்ட பயணிகள் மத்தியில் இடம் பிடித்தார். அக்கம்பக்கத்தில இருந்தவர்கள் அக்கறையோடு விசாரிக்க, ஆறுதலாக பேச ரயில் சிநேகிதம் பிறந்தது. அரை மணி நேரத்தில் அவர்களுடன் ஒருவராக ஐக்கியமானார் ஜெயா. அப்பறம் என்ன? அவர்கள் கொண்டு வந்த இனிப்பு வகைகளை அள்ளித் தந்தனர். ஆசையோடு சாப்பிட்ட ஜெயாவுக்கு அடுத்த நொடியில் நினைவு மங்கியது.
எவ்வளவு ஸ்வீட் சாப்பிட்டாரோ தெரியவில்லை. மயக்கம் தெளிய இரண்டு நாட்கள் ஆனது. எழுந்து உட்கார்ந்ததும், ‘நான் எங்க இருக்கேன்...’ என்று வழக்கம்போல் விம்மத் தொடங்கினார். ஹார்டா மாவட்டம், தாஜ்புரா என்ற குக்கிராமம், ராம்தீன் என்பவரது வீட்டில் இருப்பது தெரிந்ததும் அதிர்ந்து போனாள். கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்து பயந்து போயிருந்தவருக்கு அடுத்த அதிர்ச்சியாக மூவர் வந்தனர். மாட்டை ஓட்டிச் செல்வதுபோல், அருகில் உள்ள போக்ரானி கிராமத்திற்கு இழுத்துச் சென்றனர். அங்கிருந்த சஞ்சய், பரஜாபதி என்ற இருவரிடம் விற்பனைக்கு நீண்ட நேரம் பேரம் பேசினர். ஒரு லட்சம் ரூபாயில் ஆரம்பித்த பேரம், கடைசியில் ரூ.50 ஆயிரத்திற்கு படிந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு பொருளை (ஜெயா) அங்கேயே விட்டு விட்டு அந்த மூவரும் கிளம்பி விட்டனர்.
இரண்டு நாள் பொழுது மயக்கத்தில் கழிய, அடுத்த நாள் முழுக்க விற்பனைக்கு போக, மூன்றாவது நாளில் ஜெயாவுக்கு அலங்கார வேலைகள் அதிகாலையிலேயே தொடங்கின. மூன்று பெண்களின் விடா முயற்சியால் மணக்கோலத்திற்கு மாறினாள் ஜெயா. மாப்பிள்ளை சஞ்சய்.
கட்டாய கல்யாண ஏற்பாடுகள் செய்வது தெரிந்ததும் அழுது புரண்டு, சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார் ஜெயா. விஷயம் தெரிந்ததும் ஊரார் உதவினர். நாக்பூரில் உள்ள ஜெயாவின் அண்ணனுக்கு தகவல் பறந்தது. அடித்துப் பிடித்து ஓடி வந்தவர், தங்கையை மீட்க தம்ரானி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
கிளைமாக்ஸில் போலீஸ் வந்தது. ஜெயாவை மீட்ட கையோடு ஆறு பேரை கைது செய்தது. ‘இனிமேல் ஸ்வீட்சை கண்ணால் கூட பார்க்கக் கூடாது’ என்ற முடிவோடு அண்ணனுடன் ஊருக்கு நடையை கட்டினார் அந்த பெண்.
ஆனால், போலீஸ் சும்மா இருக்குமா? மூன்று பெண்கள் உள்ளிட்ட மேலும் ஆறு பேரை பிடிக்க இரண்டு தனிப்படைகள், நாக்பூர் மற்றும் அகோலா நகரத் தெருக்களில் தேடிக் கொண்டிருக்கிறது

வால் பையன் கமெண்ட் : பெண்கள் தனியாக பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அவசரம் என்றால் கூடுமானவரை புதியவர்கள் யாரும் உங்களுடன் பேச முற்ப்பட்டால் தவிர்க்க வேண்டும்.
தைரியம் என்பது நல்லதது தான்.ஆனால் உங்கள் பாதுகாப்பு அதைவிட முக்கியம்.பெண்கள் எப்போதும்,எந்த சந்தர்பத்திலும் கவனமாக செயல்படவும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger