மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெம் செல் வளர்ச்சியை ‘ப்ரகோலி’ எனப்படும் காலிபிளவர் வகை உணவு தடுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய உயிர்க் கொல்லி நோய், மார்பக புற்றுநோய். அதற்கான கட்டியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் ஸ்டெம் செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை வளர விடாமல் தடுக்க ‘ப்ரகோலி’ உணவுகள் உதவும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் புற்றுநோய் தடுப்பு மையப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. காலிபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் ப்ரகோலியில் ‘சல்போராபைன்’ என்ற மூலப்பொருள் உள்ளது. ப்ரகோலியை அதிகளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ‘சல்போராபைன்’ அதிகரித்து, புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும் ஸ்டெம் செல்களை தடுக்கிறது.
இதன்மூலம், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவில் குறைக்கிறது. மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் பெண்களும் உணவில் ப்ரகோலியை அதிகம் சேர்த்துக் கொண்டால், சிகிச்சைக்கு விரைவான பலன் கிடைக்கும். புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெம் செல்களை ‘ப்ரகோலி’ தாக்கி அழித்து விடும் என்று ஆய்வின் ஆசிரியர் டுக்சின் சன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “ப்ரகோலியில் உள்ள சல்போராபைனின் மருத்துவ நன்மைகள் பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக புற்றுநோயை தடுப்பதிலும், குணப்படுத்துவதிலும் அது சிறப்பாக செயல்படுகிறது. இது எலிகளிடம் நடந்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் ப்ரகோலியை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
மார்பக புற்றுநோய்யை பொறுத்தவரை சிறுவயதில் இருந்தே மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் அதிகம் தாக்குகிறது.எனவே பெண்குழந்தைகளுக்கு சிறுவதில் இருந்தே நல்ல சத்தான உணவுகளை கொடுக்கவும்.அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தால்,இந்த மார்பக புற்றுநோயை தடுக்க முடியும்.இது மரபுரீதியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது
0 comments:
Post a Comment