குறைந்த கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைவான கலோரி உணவுக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள டப்ட்ஸ் யுனிவர்சிட்டியின் ஜீன் மேயர் யுஎஸ்டிஏ மனித ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சிமின் நிக்பின் மெய்தனி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். அதன் விவரம்:
20 முதல் 40 வயதுக்குட்பட்ட 46 ஆண் மற்றும் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினருக்கு வழக்கத்தைவிட கலோரி குறைவான உணவும் மற்றொரு பிரிவினருக்கு கலோரி அதிகமான உணவும் 6 மாதம் வரை வழங்கப்பட்டது. முன்னதாக இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை ஆகியவை மதிப்பிடப்பட்டன.
ஆய்வுக்கு பின்னர் இவர்களை பரிசோதனை செய்ததில், கலோரி அதிகமான உணவு சாப்பிட்டவர்களைவிட, கலோரி குறைவான உணவு சாப்பிட்டவர் களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது தெரிய வந்தது. அத்துடன் குறைவான கலோரி உணவு சாப்பிட்டவர்களின் உடல் எடையும் சீராக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
வால்பையன் கமெண்ட் : ஆமாம் அமைச்சரே! உடல் நலம் ரொம்ம்ப முக்கியம்
2 comments:
sir my age is 52
sir my age is 52
Post a Comment