அதிக அளவில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடுவது நல்லது இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 நாட்களுக்கு தொடர்ந்து பழம் மட்டுமே சாப்பிட்டால் உடல் ஜொலிக்கும் என்கின்றனர்.
சாப்பிடுவதற்கு முன்பு பழம் சாப்பிடுவது நல்லதா? அல்லது சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லதா என லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் விவரம்:
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது, உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடுவது ஆய்வில் தெரியவந்தது.
‘தர்பூசணி சாப்பிட்டால் வாந்தி வருகிறது’, துரியன் பழம் சாப்பிட்டால் வயிறு உப்பி விடுகிறது’, ‘வாழைப்பழம் சாப்பிட்டால் டாய்லெட் போக வேண்டும் என தோன்றுகிறது’ இப்படி பலர் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். உணவு சாப்பிட்ட பிறகு, இந்த பழங்களை சாப்பிடுவதால்தான் இந்த நிலை. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இந்த பிரச்னைகளை முற்றிலும் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறும் வயிற்றில் பழம் சாப்பிட்டால், ஆயுள் கூடும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆற்றல், மகிழ்ச்சி கிடைப்பதுடன் உடல் பருமன் அடையாது. பழ ஜூஸ் குடிப்பதாக இருந்தால் பிரஷ்ஷாக குடியுங்கள். புட்டியில் அடைக்கப்பட்டது வேண்டாம். மெதுவாக உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். வேகவைத்த பழத்தையும் தவிர்க்கலாம். இதில் சத்து போய்விடும். எனினும், ஜூசாக குடிப்பதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மற்ற உணவுகளை தவிர்த்து பழங்கள், ஜூஸ் மட்டுமே சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் சுத்தமாகும். இதனால், முகம், கை, கால் என அனைத்து பகுதிகளும் பளபளப்புடன் ஜொலிக்கும் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
1 comments:
super sir
Post a Comment