Monday, May 3, 2010

சூப்பர்8 - சுற்றில் இந்தியா

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதம் அடித்த ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலக கோப்பை டி20 தொடரின் சி பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா & தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாசில் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பந்து வீசியது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. உடல்நிலை சரியில்லாத நிலையில் கம்பீருக்கு பதில் தினேஷ் கார்த்திக்கும் ஜாகீர்கானுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவும் சேர்க்கப்பட்டனர்.
விஜய் & கார்த்திக் ஜோடி களமிறங்கியது. கிளெய்ன்வெல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் விஜய் டக் அவுட் ஆனார். தடுமாற்றத்துடன் விளையாடிய கார்த்திக் 16 ரன் (2 பவுண்டரி) எடுத்து காலிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன் எடுத்து திணறிய நிலையில், அனுபவ வீரர்கள் ரெய்னா & யுவராஜ் ஜோடி சிறப்பாக விளையாடி அசத்தியது. குறிப்பாக, ரெய்னா டாப் கியரில் எகிற, நாலாபுறமும் பந்து பறந்தது. பின்னர் யுவராஜும் சேர்ந்து கொண்டார். 13.1 ஓவரில் இந்தியா 100 ரன் எடுத்தது. யுவராஜ் 37 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கிளெய்ன்வெல்ட் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்தது. சிக்சருடன் கணக்கை துவக்கிய யூசுப் பதான் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா சாதனை சதம்:
கடைசி 4 ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய ரெய்னா தனது முதல் சதத்தை பதிவு செய்தார். உலக கோப்பை டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 101 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து அல்பி மார்கெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. டோனி 16 (1 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்பஜன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவரில் இந்தியா 75 ரன் குவித்தது.
வெற்றிக்கு 187 ரன் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. பாஸ்மேன் 8 ரன் எடுத்து யூசுப் பதான் பந்தில் ஆட்டமிழந்தார். காலிஸ் & ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஸ்மித் 36 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட் ஆனார். காலிஸ் 73 (54 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து சாவ்லா பந்தில் பெவிலியன் திரும்பினார்.
கடைசி வரை போராடிய வில்லியர்ஸ் 31 ரன்னில் வெளியேற தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது.
லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியது. தென்ஆப்ரிக்கா தனது 2வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை (மே 5) எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஏற்கனவே AFKANISTHANAI இந்தியா வென்றுள்ளத்தால் சூப்பர்-8  சுற்றுக்கு தகுதி பெற்றுளளது

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger