Thursday, May 6, 2010

செயற்கை மரம்

அன்புள்ளம் கொண்ட வலைபூ நண்பர்களுக்கு
இது எனது 100 வது பதிவு.எனவே இதில் எதாவது ஸ்பெஷல் ஆக சொல்லியாக வேண்டும்.அதற்க்கு முன்பாக என்னை 100 பதிவுகள் வரை எழுத தூண்டிய எனது அன்பு நண்பர்கள் திரு.சுந்தரராஜ்,திரு.விஜயராகவன்,திரு.ரவிக்குமார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
                                        செயற்கை மரம்
இது பற்றி தான் இன்று எழுத போகிறேன்.இன்றைய சூழலில் உலகம் முழுதும் புவி வெப்பமடைதலை பற்றி தான் பேச்சு.புவி ஏன் வெப்பமடைய வேண்டும்,இவ்வளவு நாள்ஏன் புவி வெப்பமடையவில்லை.சரி புவி ஏன் வெப்பமடைகிறது அதன் காரணம் என்ன ? காரணங்களில்சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.உலகம்முழுவதும் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது
கழிவுகளை காற்றில் கலக்கின்றன .
அளவுக்கு அதிகமான வாகனங்கள்,அவை வெளியிடும் நச்சு புகை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துகின்றன.நாம் அனைவரும் தினந்தோறும் உபயோகிக்கும் குண்டு பல்ப்,குளிர்சாதன பெட்டி(split a/c ,window a /c ) விறகு அடுப்புகள்,நாம் கொண்டாடும் தீபாவளி,போகி இதுமாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்.
  இந்தியாவில் தீபாவளி கொண்டாடுவதால் மட்டும் 30 % காற்று மாசுபடுவதாக ஒரு அறிக்கை சொல்கிறது.நம்மால் மேற்கண்ட எதையும் அடியோடு விட முடியாது.
நாம் அனைவரும் அதற்க்கு பழக்கப்பட்டு விட்டோம்.
  சரி புவி வெப்பமடைவதால் என்ன பெரிதாக நடைபெற போகிறது,இதை பற்றி நாம் ஏன் கவலை படவேண்டும்.நாம் மட்டுமல்ல உலகமே இது பற்றி கவலை பட்டுத்தான் ஆக வேண்டும்.
       புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள் என்ன ?
அதிகமான வெப்பம்,அதிகமான மழை,மழைகாலங்களில் வெயில்,வெயில் காலங்களில் மழை என்ற முரண்பட்ட வானிலை மாற்றம் மற்றும் காற்று அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதால்,அண்டார்டிக்கா பனிமலைகள் உருக தொடங்கிவிட்டன. இதனால் கடல் நீர் மட்டம் உயர ஆரம்பித்து விட்டது.கடலை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் எல்லாம் சிறிதுசிறிதாக நீரில் மூழ்க துவங்கும்.
கடைசியில் மனிதன் வாழ பூமியில் இடம் இல்லாமல் போகும்.எனவே இது மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க , நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைகளை செய்ய வேண்டும்.
    முதலில் ஆயிரகணக்கான மரங்களை நட வேண்டும்.மரங்கள் காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சிவிட்டு oxygen னை வெளியிடுகின்றன. இதனால் பூமி வெப்பமடைதல் பெருமளவு குறைகிறது. ஆனால் நாம் மரங்களை இன்று நட்டால் பயன் தர பத்து ஆண்டுகளாவது ஆகும்.
  இதற்க்கு ஒரு குறுக்கு வழி (நல்லவழி )இருக்கிறது ,அதுதான் செயற்கை மரங்களை வளர்ப்பது,செயற்கை மரம் என்றால் அது ஒரு ரோபோ,மரங்கள் செய்யும் அதே வேலையை (கார்பனை உறிஞ்சிவிட்டு oxygen னை வெளியிடுகின்றன) செய்கின்றன.
மேலும் உறிஞ்சிய கார்பனை எரிபொருளாக மாற்றி தருகின்றன.
செயற்கை மரம் வளர்ப்பது தனி மனித காரியமல்ல,அதற்க்கு அரசு தான் முயற்சி செய்ய வேண்டும். ஏற்கனவே சீனா போன்ற நாடுகளில் முன் எச்சரிகையாக செயற்கை மரம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்க்கான சுட்டி கிழே உள்ளது.
 http://www.shengjie-china.com/product_list.asp?stypeid=2


2 comments:

GEETHA ACHAL said...

தங்களுடைய 100வது பதிவுக்கு வாழ்த்துகள்...

INDIA 2121 said...

தங்கள் ஆதரவிற்கு நன்றி மேடம்

Related Posts with Thumbnails
 

Blogger