இரண்டு நாளாக தவித்துப் போனது மும்பை. டிரைவர்கள் ஸ்டிரைக்கால் மின்சார ரயில்கள் ஓடவில்லை. நகரில் வெஸ்டர்ன் ரயில்வேயும் சென்ட்ரல் ரயில்வேயும் இந்த ரயில்களை இயக்குகின்றன. தினமும் 2,000 சர்வீஸ். ரயில் ஓட்டும் டிரைவர்கள் & ரயில்வே பாஷையில் மோட்டார்மேன் & ஆயிரத்து சொச்சம். தினந்தோறும் 70 லட்சம் பேர் ரயிலில் செல்கிறார்கள். ரயில்கள் நின்றதும் நகரம் ஸ்தம்பித்து விட்டது.
திங்கள் காலையில் வேலைக்கு சென்றவர்கள் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை. கையில் காசில்லாதவர்கள் பட்டினியாக ரயில் நிலையத்தில் படுத்து தூங்கினர். தொலைதூரம் நடக்க முடியாத பெண்களின் அனுபவத்தை விவரிக்க முடியாது. பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும் நேரம். மாணவர்கள் படித்ததெல்லாம் பதற்றத்தில் மறந்துபோனது. ‘மிகவும் அவசியமானால் மட்டும் வெளியில் வாருங்கள், பயணம் செல்லுங்கள்’ என அரசு கேட்டுக் கொண்டதால் மறுநாள் மக்கள் நடமாட்டம் சரிந்தது. அலுவலகங்கள் வெறிச்சோடின. ரயில்வேக்கு 100 கோடி நஷ்டம் என கணக்கிட்டுள்ளனர். மக்களின் கஷ்டத்துக்கு விலை இல்லை.
இதற்கு யார் பொறுப்பு? பொதுமக்களின் ஆவேசத்தை பார்த்ததும் டிரைவர்களை ஆதரித்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜகா வாங்கின. ரயில்வே அமைச்சர் மம்தா உள்ளாட்சி தேர்தல் வேலையாக கொல்கத்தாவில் பிசியாக இருந்தார். ‘மும்பைக்கே நாலைந்து நாள் லீவு அறிவித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் சமாளிக்கலாம்’ என்று பிரதமரிடம் மகாராஷ்டிர முதல்வர் முறையிட்ட பிறகே, டிரைவர்களுடன் பேச டெல்லி பச்சைக்கொடி காட்டியது. எஸ்மா சட்டத்தில் கைது செய்த டிரைவர்களை விடுதலை செய்து, ‘ஜூன் 15ம் தேதிக்குள் உங்கள் கோரிக்கைகள் மீது முடிவு எடுக்க ரயில்வே துறையை வற்புறுத்துவோம்’ என மாநில உள்துறை அமைச்சர் உறுதிமொழி அளித்த பின் ஸ்டிரைக் வாபஸ் ஆகியிருக்கிறது.
சம்பள உயர்வுடன் ஒரு ரயிலின் இரு முனைகளிலும் டிரைவர் நியமிக்க வேண்டும்; உதவியாளர் வேண்டும்; வார விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கைகளை டிரைவர்கள் முன்வைத்துள்ளனர். இதற்காக ஜனவரி 15ம் தேதி ஸ்டிரைக் அறிவித்தனர். ஏப்ரலுக்குள் தீர்வு காண்போம் என நிர்வாகம் வாக்குறுதி அளித்ததால் அப்போது நிறுத்திவைத்த போராட்டம் இது.
வால் பையன் கமெண்ட்: மும்பையின் முக்கிய போக்குவரத்தே ரயில் தான்,அதுவும் ஓடவில்லை என்றால் மும்பைவாசிகள் என்ன துன்பம் அனுபவித்து இருப்பார்கள்,
இனிமேலாவது அதிகாரிகள் பிரச்சனையை பேசி தீர்ப்பர்களா.
பிரச்னையை முற்றவிட்டு தீர்ப்பதில் நமது அதிகாரிகளை மிஞ்ச முடியாது.
Thursday, May 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment