இதயம் சீராக இயங்கி நோய்களை தவிர்க்க, ரத்தத்தில் இன்சுலின் அதிகரித்து டயபடீஸ் ஆபத்தை குறைக்க திராட்சை சாப்பிடுங்க என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
திராட்சைப் பழத்தால் உடல்நலனுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். பச்சை, சிகப்பு, கருப்பு ஆகிய பல வண்ணங்களில் கிடைக்கும் திராட்சைகளை பவுடராக மாற்றி எலிகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். இன்னொரு எலி குரூப்புக்கு திராட்சைக்கு இணையான கொழுப்பு, சர்க்கரை சத்துள்ள உணவுகளை கொடுத்தனர். 3 மாதங்கள் கழித்து ஆராய்ந்தனர். திராட்சையை அதிகளவில் சாப்பிட்டு வந்த எலிகளுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. இதயம் சிறப்பாக செயல்பட்டது. இதயம், ரத்தத்தில் எரிச்சல் உணர்வு மறைந்து போயிருந்தது.
இதுபற்றி இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்டீவன் போலிங் கூறுகையில், “பல்வேறு ரக திராட்சைகளின் பவுடரை சாப்பிட்ட எலிகளின் இதய செயல்பாடு முன்னேற்றம் அடையவும், ரத்த அழுத்தம் குறையவும் உடலின் இயக்கத்தில் திராட்சையின் சத்துக்கள் ஏற்படுத்தும் மாற்றமே காரணம்” என்றார்.
ரத்த அழுத்தத்தை சீராகவும், டயபடீஸ் ஆபத்தை குறைக்க விரும்புவோர் திராட்சை உட்பட பழங்களை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டீவன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment