ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்தில் செட்டில் ஆகும் எண்ணம் இருந்தால் 3 மாதங்களுக்குள் அதை முடித்து விடுங்கள். ஏனெனில், அதன் பிறகு அந்நாட்டில் குடியேற அவர்கள் வைக்கும் ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது.
இங்கிலாந்தில் வசிப்பவரை திருமணம் செய்யவோ, அங்கு நிரந்தரமாக தங்கவோ விரும்பும் ஐரோப்பிய நாடு அல்லாத வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறையை பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குறுகிய கால வேலை, தற்காலிக பணி, சுற்றுலா ஆகிய காரணங்களில் இங்கிலாந்து வரும் எந்நாட்டினருக்கும் எந்த நிபந்தனையும் இல்லை.
ஆனால், இங்கிலாந்திலேயே செட்டில் ஆவது, அந்நாட்டு வாழ்க்கை துணையுடன் இணைவது, நிரந்தர பணியாக தங்குவது ஆகிய காரணங்களில் வருவோர், ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. அதற்காக தேர்வு நடத்தி அனுமதி வழங்க இங்கிலாந்து எல்லை முகாமை (யுகேபிஏ) என்ற ஏஜென்சிக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அதிரடி மாற்றம், நவம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக யுகேபிஏ அறிவித்துள்ளது.
இப்போது இங்கிலாந்தில் தங்கியுள்ள ஐரோப்பா அல்லாத வெளிநாட்டினர், இங்கிலாந்து குடிமகன்/மகளை திருமணம் செய்யவும் இந்த விதிமுறை பொருந்தும். ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு செட்டில் ஆகி விட்டாலும், 2 ஆண்டுகள் தற்காலிக குடியுரிமை மட்டுமே கிடைக்கும்.
0 comments:
Post a Comment