Thursday, July 8, 2010

இன்றைய ராசிபலன் - 08.07.2010

 மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், சோர்வு, சலிப்பு நீங்கும். கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சி தங்கும் நாள்.
ரிஷபம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
மிதுனம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்:
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
சிம்மம்:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
கன்னி:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவுப் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். நிம்மதியான நாள்.
துலாம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புது முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
தனுசு:
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
மகரம்:
புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சொந்த,பந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
கும்பம்:
பிள்ளைகளால் நிம்மதியடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மீனம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger