Saturday, July 10, 2010

இன்றைய ராசிபலன் - 10.07.2010(பொதுபலன்)

 மேஷம்:
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த,பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
ரிஷபம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். புதியவரின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மிதுனம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம்:
சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
சிம்மம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
கன்னி:
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைத் தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
துலாம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உறவினர் சிலர் வலிய வந்து பேசுவார்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.
தனுசு:
தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவு வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மகரம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் மதிப்பு கூடும். பிரபலங்கள் அறி முகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
கும்பம்:
குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்ட றிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
மீனம்:
பழைய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger