Wednesday, July 7, 2010

இன்றைய ராசிபலன் - 07.07.2010

மேஷம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர் களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
 
ரிஷபம்:
எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
 
மிதுனம்:
குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பணம் வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
கடகம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
சிம்மம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறு வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
கன்னி:
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். கணவன்,மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
 
துலாம்:
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
விருச்சிகம்:
பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்டறிந்து களைவீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். சாதிக்கும் நாள்.
 
தனுசு:
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப் பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நிறை வேறும் நாள்.
 
மகரம்:
எதிர்ப்புகள் அடங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். மகிழ்ச்சியான நாள்.
 
கும்பம்:
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றி பெறும் நாள்.
 
மீனம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger