தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மோதின. இதில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. பைனல் மேட்சில் பயன்படுத்தப்பட்ட அடிடாஸ் கால்பந்து, இங்கிலாந்தின் லாபரோ பல்கலைக்கழகத்தில் சிறப்பான தொழில்நுட்பம் மற்றும் ஏரோடைனமிக்ஸ் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த பந்தை உதைக்கும்போது அது காற்றில் செல்லும் விதத்தை யூகிக்க முடியவில்லை என்று வீரர்களும், பயிற்சியாளர்களும் விமர்சனம் செய்தனர். பைனலில் வீரர்களிடம் உதை வாங்கிய இந்த பந்து இன்டர்நெட்டில் ஏலம் விடப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே விலை தாறுமாறாக ஏறியது. முதலில் 99 பவுண்டில் ஆரம்பித்த ஏலம் முடிவில் 48 ஆயிரத்து 200 பவுண்டில் (ரூ.34 லட்சத்து 70 ஆயிரம்) முடிந்தது. இந்தப் பணம் தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நடத்தும் அறக்கட்டளைக்கும், ஆப்ரிக்காவின் ஏழ்மை மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு ஆராய்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
Monday, July 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment