Saturday, July 3, 2010

இன்றைய ராசிபலன் - 03.07.2010 (பொதுபலன்)

 மேஷம்:
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
 
ரிஷபம்:
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
 
மிதுனம்:
சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
கடகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
சிம்மம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
 
கன்னி:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
துலாம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
விருச்சிகம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
 
தனுசு:
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
மகரம்:
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
கும்பம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வர வேண்டிய பணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
மீனம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்,மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத் யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger