Tuesday, July 6, 2010

இன்றைய ராசிபலன் - 06.07.2010

 மேஷம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உடல் நலம் பாதிக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் இன்று எதிலும் அவசரப்பட வேண்டாம். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
 
ரிஷபம்:
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மிதுனம்:
பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
 
கடகம்:
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.
 
சிம்மம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
கன்னி:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களைப்பற்றி வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 
துலாம்:
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
விருச்சிகம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
 
தனுசு:
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.
 
மகரம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
கும்பம்:
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.
 
மீனம்:
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger