சென்னை மாணவர்கள் கண்டு பிடித்த எலக்ட்ரானிக் டாய்லெட்டுக்கு போலந்தில் நடந்த விழாவில் 2வது பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோ சாப்ட் நிறுவனம் ‘இமேஜின் கப் 2010‘ என்ற விருது வழங்கும் விழாவை போலந்து நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தியது. விழாவில் உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 25,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில், பூந்தமல்லி , திருவள்ளூர் நெடுஞ்சாலை அரண்மனைவாயில் குப்பத்தில் உள்ள பிரதியுஷா தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் கவுசிக், கிரண் குமார், லலிதா அசோக் ஆகியோர் பங்கேற்றனர். எலக்ட்ரானிக் டாய்லெட் வடிவமைப்பு வரைவு திட்டத்தை சமர்ப்பித்தனர். இதற்கு 2வது பரிசு கிடைத்தது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
எங்களது வரைவு திட்டத்தின்படி எலக்ட்ரானிக் டாய்லெட் அமைக்க ரூ.15,000 செலவாகும். இதில், 7 லிட்டருக்கு பதிலாக 1 லிட்டர் தண்ணீர் பயன்டுத்தினால் போதும். இதனால், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. டாய்லெட்டுக்குள் போகும் கழிவு எவ்வளவு என்பதை துல்லியமாக அளவிட முடியும். கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். கிராம மக்களுக்கு இது ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தோம்.
0 comments:
Post a Comment