மேஷம்:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமை, கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ரிஷபம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் செலவுகள் வந்து போகும். குடும்பத்தாரை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மிதுனம்:
குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகன விபத்து ஏற்படக்கூடும். எதிர்பாராத பயணம் உண்டு. உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத் யோகத்தில் பணிகளை போராடி முடிப் பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கடகம்:
கணவன்,மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணம் வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.
சிம்மம்:
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் புதிய செயல்முறைகளை அதிகாரி பாராட்டுவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி:
கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
துலாம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். கணவன், மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சிக்கனம் தேவைப் படும் நாள்.
விருச்சிகம்:
கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
தனுசு:
துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்:
பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்:
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.
0 comments:
Post a Comment