இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் அடுத்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் புள்ளிகளை கடக்கும் என்று பங்கு பரிவர்தனை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் இந்திய பங்குச் சந்தையின் நிலவரம் குறித்து அனில் அம்பானி குரூப்பின் மேனேஜர் மதுசூதன் கெலே கூறிய விவரம் வருமாறு:
உலக அளவில் ஓப்பிடுகையில் இந்திய பங்குச் சந்தை நிலவரம் நல்ல நிலையில்தான் உள்ளது. இந்திய பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். நாளுக்குநாள் சந்தையில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் 3 முதல் 5 ஆண்டுக்குள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இரண்டு மடங்காக உயரும். தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 18,000 புள்ளிகளாக உள்ளன. இவை அடுத்த 5 ஆண்டில் 100 சதவீத வளர்ச்சியை எட்டி 30,000 புள்ளியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகஸ்டில் அன்னிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் 11,447 கோடி முதலீடு செய்துள்ளன. இது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 60,000 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற வளர்ச்சியின் காரணமாக பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் விரைவான வளர்ச்சியை எட்டும். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சென்செக்ஸ் 16,000 - 17,000 புள்ளிகளுக்கு இடையே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டுக்குப் பின் ஆகஸ்ட்டில் 18,475 புள்ளிகளாக உயர்ந்தது. மேலும் இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு அதிக அளவில் இருப்பதாலும் விரைவான முன்னேற்றத்தை பங்குச் சந்தையில் காணலாம் என்று அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment