Wednesday, August 4, 2010

ஆசிரியப் பணியிலும் பினாமியா?

 
  கோடிக்கணக்கில்சொத்து வைத்திருக்கும் பணக்காரர்கள்தான் வருமான வரிக்கு பயந்து பினாமி வைத்திருப்பார்கள். பினாமியாக இருப்பவருக்கு தன் பெயரில் எவ்வளவு சொத்து இருக்கும் என்பது கடைசி வரைக்கும் தெரியாது. பத்திரத்தில் கையெழுத்து போடுவதோடு அவர் வேலை முடிந்தது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் பினாமியாக ஒருவரை நியமித்து தனது வேலையை பார்க்க வைத்துள்ளார். அவருக்கு இவரே சம்பளமும் கொடுத்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் தரம் குறைவாக இருக்கிறது என்றும் தேர்ச்சி விகிதம் திருப்தியில்லை என்றும் அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. சென்னை, மதுரை, கோவை, நெல்லை போன்ற பெரிய நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு படிப்பு சொல்லித் தர ஆசிரியர்கள் ஓரளவுக்கு முயற்சி எடுக்கிறார்கள். அதனால் தரமும் இருக்கிறது. ஆனால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அது ஆரம்ப பள்ளியாக இருந்தாலும் சரி மேல்நிலைப் பள்ளியாக இருந்தாலும் சரி... மாதத்தில் பாதி நாட்கள் பல ஆசிரியர்கள் வேலைக்கு வருவதில்லை. லீவு, லீவு, லீவுதான். விவசாயம், வட்டிக்கு விடுதல், நில புரோக்கர் என சைடு பிசினஸை கவனிப்பதில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அது போரடித்தால் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் சிக்கினால், மாணவர்கள் கதி அவ்வளவுதான். இதில் ஒரு ஆசிரியர் ஒரு படி மேலே போய் தனக்கு பதிலாக வேறு ஒருவரிடம் தனது வேலையை பார்க்க சொல்லியிருக்கிறார். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் என்பதால் இவரின் சம்பளம் ரூ.40 ஆயிரம். இவர் கொடுத்தது வெறும்
ரூபாய்.2,500.தான் வேலை பார்க்காமலே ரூபாய். 37,000 சம்பாத்தியம்.
இப்படி ஒரு மாதமல்ல, இரண்டு மாதமல்ல. 24 மாதம் மோசடி செய்திருக்கிறார்.
இவர் வேலை பார்த்த கோபியில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 13 பேரும் இந்த ஆண்டு 16 பேரும் பெயில். மொத்த மாணவர்கள் எண்ணிக்கையே அந்த வகுப்பில் 30 பேர்தான். பாதிக்குப் பாதி பெயில். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிளஸ் 2 படிப்பில் இப்படி ஒரு மோசமான ரிசல்ட். இதுபற்றி விசாரித்த போதுதான் பினாமி விஷயமே வெளியே தெரிந்திருக்கிறது. இன்னும் எத்தனை பள்ளிகளில் பினாமிகள் பாடம் நடத்துகிறார்களோ... பாவம் மாணவர்கள்.
ஆசிரிய பணி மிகவும் புனிதமான பணி,இதிலும் போலிகளா?

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger