Wednesday, August 25, 2010

புகை பிடித்தால் தாம்பத்ய உறவு பாதிக்கும்

 புகை பிடிப்பதால் தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தாம்பத்ய குறைபாடுக்கும் புகை பிடிப்பதற்கு உள்ள தொடர்பு பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி நடத்தியது. தாம்பத்ய உறவு கொள்வதில் சிக்கலை சந்திக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட 700 ஆண்கள் ஆய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் 3 ஆண்டுகள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டன. தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவு, ஆர்வம் இருந்தாலும் ஈடுபட முடியாமை ஆகிய பிரச்னைகளில் தவித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச் சை பெற்றவர்களில் 53.8 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட பிறகே சிகிச்சைக்கு பலன் கிடைத்தது என்றனர். புகை பழக்கத்தை கைவிட்ட 6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினர்.
விரைப்புத்தன்மை குறைபாடுக்கு சிகிச்சை பெற்றவர்களில் புகை பழக்கம் இருந்தவர்கள் அதை நிறுத்திய பிறகே பலன் கிடைத்ததாக தெரிவித்தனர். இதுபற்றி ஆய்வுக் குழு பேராசிரியர் சோபியா சான் கூறுகையில், “சீனா, ஆசிய நாடுகளில் விரைப்புத்தன்மை குறைபாடு அதிக ஆண்களிடம் உள்ள பிரச்னை. இதில் பெரும்பாலோர் புகைபிடிப்பதே காரணம்” என்றார்.
பேராசிரியர் லாம் தாய் ஹிங் கூறுகையில், “புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் நோய்கள் ஏற்படும் என்று மட்டுமின்றி ஆண்மையிழப்பு உட்பட தாம்பத்ய குறைபாடுகளும் ஏற்படும்” என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger