Friday, August 13, 2010

பயோடேட்டா பார்த்து பணம் பறிக்கும் கும்பல்

 வேலை தேடுவோருக்கான இணைய தளங்களில் பதிவு செய்வோர் விவரத்தை தெரிந்து கொண்டு, வேலை தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்துள்ளன. எனவே, தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க வேலைவாய்ப்பு இணைய தளங்கள் நடவடிக்கை தொடங்கியுள்ளன.
வேலை தேடுவோருக்கும், அதை அளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு வெப்சைட்கள் பாலமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பயோடேட்டாவை பதிவு செய்து, போட்டோவை அப்லோடு செய்தால், வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்து நேர்காணல் அழைப்பு அனுப்பும்.
இதுபோன்ற இணைய தளங்களில் முகவரி, போன் எண், வயது, கல்வித் தகுதி, குடும்ப விவரங்கள் ஆகிய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறும். வேலை அளிக்கும் பேரில் இந்த இணைய தளங்களில் பதிவு செய்துள்ள பயோடேட்டாக்களை விஷமிகள் சிலர் பார்க்கின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள் என அதிக சம்பளத்தில் வேலை தயார் என்று அப்பாவிகள் சிலரை தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் வேலை பெற்றுத் தருவதற்கான கட்டணம், முன்பணம், செலவுகள் எனக் கூறி பணம் கறந்து விடுகின்றனர். இதுபோல சமீபத்தில் ஒருவருக்கு விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக லட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்தது.
இதுபற்றி தகவல்கள் வெளியானதால், வேலைவாய்ப்பு இணைய தளங்கள் உஷாராகின. “மோசடி பற்றி தெரிந்ததும், எங்கள் இணைய தளத்தில் பதிந்துள்ள பயோடேட்டாக்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்தோம். தனிப்பட்ட விவரங்களான முகவரி, போன், இ-மெயில் போன்றவற்றை விஷமிகள் தொடர்பு கொள்ள முடியாதபடி தடை செய்திருக்கிறோம்” என்று முன்னணி வேலை இணைய தள உயரதிகாரி நேற்று தெரிவித்தார்.

2 comments:

பொன் மாலை பொழுது said...

உண்மைதான். சென்ற ஏழுமாத காலமாக தினந்தேறும் எனக்கு வந்து சேரும் கணக்கற்ற மின் அஞ்சல்களை பார்த்து
மலைதுபோவதுண்டு. ஆனால் அதில் செல்லி வைத்தார் போல அணைவரும் கேட்பது பணம் அனுப்ப சொல்லி.வேலைக்கு விண்ணப்பித்த வேலை வாய்ப்பு தளங்களின் கடிதங்கள் அல்ல அவைகள். பல தடை குறிப்பிட போர்டல் களில் சொல்லிய பிறகு தற்போது பரவாஇல்லை.வேலயு தருபவர்கள் நம்மிடம் பணம் கேட்க மாட்டார்கள்.
சென்ற மாதம் நம் நாட்டில் மிக பிரபலமான ஒரு எலக்ட்ரோனி சாதனங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் பேரில் வேலையில் சேரச்சொல்லி 12000 ரூபாய் பணம் அனுப்ப கேட்டார்கள். பின்னர் டெல்லி செல்ல விமான பயண டிக்கெட் தருவதாக விளக்கியிருந்தனர். சிரித்துக்கொண்டே அவைகளை "குப்பை"குள்ளே தள்ளிவிட்டேன்.

INDIA 2121 said...

//கக்கு - மாணிக்கம் said...

உண்மைதான். சென்ற ஏழுமாத காலமாக தினந்தேறும் எனக்கு வந்து சேரும் கணக்கற்ற மின் அஞ்சல்களை பார்த்து///

உண்மை தான்,உஷாரா இருங்க

Related Posts with Thumbnails
 

Blogger