சோயா பீன்ஸில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜென், பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன என உணவியல் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
தங்கள் முன்னழகு எடுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்களே இருக்கமாட்டார்கள். உலகமெங்கும் கோடிக்கணக்கான பெண்கள், தங்களுடைய முன்னழகை வனப்பாக்க விரும்புகிறார்களாம். பொதுவாக பெண்மையின் அடையாளங்களை பெரிதாக்கிக் கொள்ள காஸ்ட்லியான வழிமுறைகளும், ரிஸ்க்கான ஆபரேஷன்களுமே இருந்த நிலையில் எளிய மாற்று வழியை சொல்கிறார்கள் உணவியல் மற்றும் மருத்துவ வல்லுனர்கள்.
பெண்களின் மார்பக வளர்ச்சியில் ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் ஹார்மோனான ‘ஈஸ்ட்ரோஜன்’ இயற்கையிலேயே நன்றாக சுரக்கும் பெண்களுக்கு, நளினமான உடல் வாய்த்து விடுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் பிரச்சனைகளால் முன்னழகிலும் சறுக்கல் ஏற்படுகிறது.
பெண்கள் வயதுக்கு வரும்போது, இந்த ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் உடலெங்கும் பரவி அவர்களை பூரிப்பாக்கும். மாத விடாய் சுழற்சியையும் தொடங்கி வைத்து பெண்மைக்கேயுரிய நெளிவுசுளிவுகளை கொடுக்கும். பொதுவாக 12 முதல் 16 வயது வரையிலான பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் உடலில் அதிகம் சுரக்கிறது. மாதவிடாய் முடியும் காலத்தில் ஹார்மோன் சுரப்பது குறைந்து விடும்.
மார்பகங்களை வனப்பாக்குவதில் ‘ஈஸ்ட்ரோஜன்’ முக்கிய பங்காற்றுவதால் அதை உடலில் பெருக்கினாலே முன்னழகு பிரச்னை தீர்ந்து விடும். ‘ஈஸ்ட்ரோஜன்‘ ஹார்மோனை பெருக்க செயற்கை வழிகள் இருந்தாலும், ஆபத்தில்லாத இயற்கை வழியும் உள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள்.
சில தாவர உணவுகளில் இயற்கையாகவே ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் இருப்பதால் அவற்றை சாப்பாட்டாலே போதுமாம். பைட்டோ ஈஸ்ட்ரோஜன் எனும் இந்த தாவர ஹார்மோன் சோயா பீன்ஸ்சில் அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிடும் போது ஈஸ்ட்ரோஜன் இயற்கை யாகவே உடலுக்கு கிடைத்து விடுகிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். எனவே சோயா பீன்ஸில் தயாராகும் மீல் மேக்கர், டோபு (சோயா பாலில் தயாராகும் பனீர்) போன்ற உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும். ஈஸ்ட்ரோஜன் உடலில் பெருகும் போது மார்பகங்களும் தன்னாலே வனப்பாகி விடுகின்றனவாம்.
மாறி வரும் வாழ்க்கை முறைகளால் பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் கூட ‘ஈஸ்ட்ரோஜன்’ சுரப்பில் பிரச்னை வரலாம் என்றும் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment