அலெக்சாண்டர் பிளெமிங் 82 ஆண்டுக்கு முன் இவர் பென்சிலின் என்ற உன்னதமான மருந்தை கண்டுபிடித்தார். உடலில் பாக்டீரியா தொற்றுவதால் ஏற்படக்கூடிய கோளாறுகளை தடுக்கும் வல்லமை படைத்த முதல் ஆன்டிபயாடிக் மருந்து இது தான்.
அதன் பின் தான், பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள், ஏகப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடித்து சந்தையில் குவித்தனர். எந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் நல்லது செய்வதாக நாம் நினைத்தோமோ, அந்த மருந்துகள் தான் ஆபத்தானதாக உருவெடுத்துள்ளன.
அறுபதாண்டுகளில் வயிற்று வலி முதல் மூளை பாதிப்பு வரை உள்ள பல கோளாறுகளை தீர்க்க பல ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்து விட்டன. ஆனால், ஆன்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாமல் பல தொற்றுக்கிருமிகள் உள்ளன என்பதை 16 ஆண்டுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
‘சூப்பர் பக்’ கிருமிக்கு அண்ணன்களை கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தபடி தான் உள்ளனர். , முதன் முறையாக அமெரிக்காவில் ராக்பெல்லர் பல்கலைக்கழக மைக்ரோபயாலஜிஸ்ட் அலெக்சாண்டர் டோமஸ்,‘ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கே கட்டுப்படாத பல பாக்டீரியா கிருமிகள் உள்ளன’ என்று பட்டியலிட்டிருந்தார்.
இப்படி 16 ஆண்டாக நீடித்த சூப்பர் பக் சர்ச்சை இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த சூப்பர் பக் கிருமிக்கு புதுடெல்லி கிருமி என்றும் பிரிட்டன் லொள்ளு விஞ்ஞானிகள் பெயர் வைத்து விட்டனர்.
இந்தியாவில் சிகிச்சை பெற்று திரும்பிய வெளிநாட்டவர் சிலருக்கு சூப்பர் பக் தொற்றியுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் அவர்களை தொற்றியது ‘ஸ்டபிலோகோகஸ் ஆரஸ்’ பாக்டீரியா என்ற கிருமி தான்.
உலகம் முழுவதும், மனிதன், பிராணிகள், விலங்குகள் மூலமாக பரவி உள்ள 3 ஆயிரம் பாக்டீரியா தொகுப்புகளில் ஒன்று தான் இது. அப்படியிருக்க, இந்தியாவில் இருந்து தான் ஆரம்பித்தது என்று கூறியிருப்பது ‘முட்டாள் தனம்’ என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டனர் என்பது திருப்தியளிக்கும் விஷயம்.
சமீபகாலமாக
கூப்பாடு போட்ட ‘சூப்பர் பக்’ கிருமி, முதலில், இந்தியா சென்று திரும்பிய ஒரு ஆஸ்திரேலியரை தொற்றியது என்று அந்த நாடு கூறியது.
அடுத்து, பிரிட்டன் தான் அதிக லபோதிபோ போட்டது. ‘எங்கள் நாட்டை சேர்ந்த 37 பேர் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா சென்றனர். அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சையின் போது தான் ‘சூப்பர் பக்’ தொற்றியது’ என்று அலறியது. ஆனால், கடந்தாண்டே, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒரு பயணி, இந்தியா வந்தபோது அவருக்கு இந்த கிருமி தொற்றியது. மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அப்போதே, கிருமி தொற்றியது குறித்து தகவல் வெளியிட்டனர். அப்போதெல்லாம் இந்த சூப்பர் பக் கூப்பாடு ஆரம்பிக்கவில்லை.
ஆனால், பிரிட்டனில் இருந்து லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளிவந்ததும் தான் இதில் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன் நிபுணர்கள் தான் வீண் பழியை இந்தியா மீது தொடர்ந்து போட்டபடி இருந்தனர்.
போதாக்குறைக்கு இந்த கிருமிக்கு, ‘நியூடெல்லி மெடல்லோ லாக்டோமஸ்’ என்றும் பெயர் வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் உடலை அழகுபடுத்தும் சிகிச்சை செய்து கொண்டவர்கள்.
கார்த்திகேயன்
குமாரசாமி; தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஏ.எல்.முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மாணவர். இவரும், பிரிட்டனை சேர்ந்த திமோதி வால்ஷ் என்ற விஞ்ஞானியும் சேர்ந்து தான் ‘சூப்பர் பக்’ தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையை தயார் செய்தனர்.
ஆனால், அதை திருத்தி லான்செட் வெளியிட்டுள்ளது தான் இதில் கவனிக்கப்பட வேண்டியது. ‘சூப்பர் பக் என்று சொன்னாலும் சரி, நியூடெல்லி பாக்டீரியா என்று சொன்னாலும் சரி, எதற்கும் கவலைப்பட வேண்டாம். இந்த பாக்டீரியா ஒரு பெரிய விஷயமே இல்லை. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பன்றிக்காய்ச்சல் வைரசை விட, இது ஒன்றும் ஆபத்தானது அல்ல’ என்றும் அடித்துக்கூறினார்.
ஆய்வு கட்டுரை வெளியானதும், மத்திய சுகாதார அமைச்சகம் கடும் கொதிப்படைந்தது. ‘எந்த ஆதாரமும் இல்லாமல், ஆவணங்களும் இல்லாமல் இப்படி பொதுவாக குற்றம்சாட்டுவது அழகல்ல; அதுவும் விஞ்ஞானிகள் இப்படி செய்வது வேதனையானது. மற்ற நாடுகளில் எல்லாம் சோதனைகளை செய்த பின்னர், அதை ஒப்பிட்டுப்பார்த்துத்தானே ஒரு நாட்டை குற்றம் சாட்ட முடியும். அப்படியில்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சொல்லலாம்’ என்று அமைச்சகம் பதிலடி கொடுத்தது.
காலையில்
அட்வைஸ்: எழுந்ததும் பெட் காபி; அடுத்து, பேப்பர் படித்துக்கொண்டே சிற்றுண்டி; அப்படியே டிவி ரிமோட்டுக்கு ஒரு தாவல். அதற்குள் ஏகப்பட்ட முறை ட்ரிங்...ட்ரிங்... இப்படி ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே பல முறை பல பொருட்களை தொட்டு விடுகிறோம். இவற்றில் எல்லாம் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரியுமா?
இதுவரை வெளியில் தெரியாமல் நம்முள் பல பாக்டீரியாக்கள் வலம் வந்தன. இப்போது வியாபார போட்டி அதிகமாகி விட்டது. பயமுறுத்தினால் அடுத்தடுத்து ஆன்டிபயாடிக் மருந்துகள் விற்பனை ஆகும் என்பதால் சூப்பர் பக் பிரசாரம் தலைதூக்கி உள்ளது. இது ஒரு ஆரம்பம் தான்; அடுத்தடுத்து பக்...பக் வரத்தான் போகிறது.
0 comments:
Post a Comment